மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம்
இந்தியா

மேற்கு வங்கத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிலவரம் வெளி வந்து கொண்டிருக்கிறது.

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனால் 2 மாதங்களுக்கு மேலாக மாநில தேர்தல் களம் மிகவும் கொதிநிலையில் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலை விட அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் அனல் பறந்தது. இதனால் அரசியல் மோதல்கள், வன்முறைகள், தாக்குதல்கள் என பதற்றத்துக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டன.

இப்படி 2 மாதங்களுக்கு மேலாக மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறியது. தற்போதைய நிலவரத்தின் படி திரிணாமூல் காங்கிரஸ் 191 இடங்களிலும் பாஜக 97 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் 1 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதியில் என்ஆர்காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 84 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், பிற கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் சிபிஎம் 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 46 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், பிற கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியா,கொரோனா வைரஸ்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை அசுரவேகத்தில் பரவி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 20 மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மகாராஷ்டிராவிலும், டெல்லியிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினந்தோறும் அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 2,04,832 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 2,69,507 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,50,86,78 ஆக உயர்ந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 82.33 சதவிகிதமாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.12 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,84,814 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 1,06,105 பேர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா,கொரோனா வைரஸ்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா உயர்ந்து வந்த நிலையில், நேற்று மட்டும் சற்று குறைந்தது. கொரோனா பாதிப்பை கண்டறிய நாடு முழுவதும் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 23 ஆயிரத்து 912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 28 கோடியே 27 லட்சத்து 03 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 82.54 சதவிகிதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.12 சதவிகிதமாகவும் உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு,சினிமா,கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். மறுநாள் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் உயிரிழப்பு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டதால்தான் விவேக் உயிரிழந்தார் என்று நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அவர் மீது சென்னை கோடம்பாக்கம் மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது பொது அமைதியை கெடுத்தல், தொற்கு நோயை பரப்பும் எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சர்ச்சைப் பேச்சில் சிக்கிய வழக்கில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவில், என்னை அறியாமல் பேசிவிட்டேன். எனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், 2 லட்சம் அபராதம் விதித்ததோடு, இந்த தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு தர உத்தரவிட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என்றும் கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியது.


இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
தமிழ்நாடு,சினிமா,கொரோனா வைரஸ்

இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவர் ஆண் தேவதை, ரெட்டசுழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களாக அசோக் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார்.

இரட்டைச்சுழி படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் ஒன்றாக இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆண் தேவதை படத்தை இயக்கியிருந்தார். சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடித்திருந்த அந்தப் படத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்காமல் 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போனது. பின்னர் ஒருவழியாக வெளியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கொரோனா தொற்றால் இயக்குநர் இறந்திருப்பது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மணி செய்தி

MS Dhoni Birthday Wishes By Chinna thala Wishes pour in for MS Dhoni as the ‘Captain Cool’ turns 40


NEET, TNCMStalin, Tamilnadu, TN Students, MKStalin
தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளைச் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்குமாறு அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களது குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம், 2021' என்ற சட்டமுன்வடிவினை நிறைவேற்றியுள்ளதாகவும், அந்தச் சட்டமுன்வடிவின் நகலையும் இக்கடிதத்துடன் இணைத்து அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே தங்களது நிலைப்பாடாகும் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையைத் தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டுமென்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து, கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டு, இந்த முக்கியமான பிரச்னையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி, இப்பிரச்னை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Puli, Tiger, Chennai highcourt, UP Women case, Ooty
நீலகிரி,சென்னை,தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீலகிரியில் 4 பேரை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர். எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. புலியை சுட்டுப்பிடிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை,' எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.


 Cancer, poison injection, Salem boy, Salem father, son killed
மாவட்டம்,சேலம்,முகப்பு,தமிழ்நாடு,முதன்மை செய்தி

புற்றுநோயால் அவதிப்பட்ட 14 வயது மகனை விஷ ஊசி போட்டு கொன்றதாக எழுந்த புகாரின் பேரில் சிறுவனின் தந்தை, ஊசி போட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கட்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் வண்ண தமிழ், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளான். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த போது புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதன்பின் சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சையை தொடர்ந்துள்ளனர். கடந்த சில தினங்களாக சரிவர சாப்பிடாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு படுக்கையிலேயே இயற்கை உபாதைகள் கழிக்கும் நிலை ஏற்பட்டது.

அதனால் கவலையடைந்த பெரியசாமி, உள்ளூர் மருத்துவ பணியாளர் ஒருவரை அழைத்து வந்து ஊசி போட்டதாக தெரிகிறது. மறுநாள் காலையில் பார்த்த போது சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்தான். இதனையறிந்த அப்பகுதி மக்கள், சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக பேச தொடங்கினர்.

அது பற்றிய தகவல் காட்டுத்தீயாய் பரவியதால் கிராம நிர்வாக அலுவலர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுவனின் தந்தை பெரியசாமி, விஷ ஊசி போட்ட மருத்துவ பணியாளரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், Facebook, WhatsApp, Instagram, Twitter
உலகம்,முதன்மை செய்தி

நேற்றிரவு திடீரென பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் சேவைகள் முடங்கியது. இதன் பின்னர் அதிகாலை 4 மணிக்குத்தான் சேவை சீரானது.

மார்க் சகர்பெர்க்கின் சமூக வலைதள நிறுவனங்களான பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறால் நேற்றிரவு முதல் சேவை முடங்கியது. இதனால் ஆதங்கமடைந்த நெட்டிசன்கள், ட்விட்டரில் பல்வேறு வகையான மீம்ஸ்களை பதிவிட்டு முடங்கிய செயலிகளை கலாய்த்தனர். பயனாளர்களின் பதிவுகள் மற்றும் மீம்ஸ்களுக்கு வலு சேர்க்கும் விதமாக ட்விட்டர் நிறுவனமும் அனைவருக்கும் வணக்கம் என்று பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமை கலாய்த்தது.

ட்விட்டரின் பதிவுக்கு வாட்ஸ்ஆப் 'ஹலோ' மற்றும் இன்ஸ்டா 'ஹாப்பி மண்டே' என்றும் ரிப்ளை செய்தனர். இவை மட்டுமின்றி மெக் டொனால்ஸ், ட்ரு காலர் என பல்வேறு நிறுவனங்களும் ட்விட்டரின் பதிவில் கமன்ட் செய்து உரையாடினர். வழக்கமாக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவதை கண்ட பயனாளிகள், ஓர் இரவில் ட்விட்டரே ட்ரெண்டிங் ஆனதை கண்டனர். ஆனால் அதிக பயனாளர்கள் ஒரே நேரத்தில் ட்விட்டர் பக்கம் திரும்பியதால் அதன் சேவையும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டது. இதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் பக்கங்கள் முடங்கியதை கேலி செய்த ட்விட்டர் தளமும் முடங்கியது.

இந்த நிலையில் 6 மணி நேரத்திற்கு பிறகு காலை சுமார் 4 மணி அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைத்தளங்கள் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரத்தொடங்கின. இது குறித்த ட்விட்டர் பதிவில், உலகெங்கும் உள்ள பயனாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. சேவைகளை முழு அளவில் மீண்டும் வழங்க கடுமையாக பணியாற்றி வருவதாகவும், தொடர்ந்து முழு அளவில் சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கின்றன. அதேநேரத்தில், எதன் காரணமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகள் முடங்கியது என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.


நீலகிரி, புலி, தமிழக அரசு, தமிழக வனத்துறை, சென்னை உயர்நீதிமன்றம், Nilgiris, Tiger, Tamil Nadu Government, Tamil Nadu Forest Department, Chennai High Court
மாவட்டம்,நீலகிரி,தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என்று வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடர்பட்டது. அதில், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் பேனர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த புலியை கொல்வதற்காக சுட்டுப்பிடிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதை உயிருடன் பிடிப்பதே நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, நீலகிரியில் உலவும் புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் எனவே புலியை கொல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் புலியை பிடிக்கும் பணியின் போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்றும் புலியின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அதை பிடித்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த புலியை பிடித்து சிகிச்சை அளித்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்தனர்.


OPS, EPS, ADMK, TNLocalBodyElection
கட்டுரை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடந்தன. சசிகலா தலைமை என்ற நிலை மாறி, அவர் சிறைக்கு சென்றதும், பன்னீர்செல்வமா..? எடப்பாடியா…? என்ற மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சமாதானம் செய்து கொண்டு கட்சியை சேர்ந்தே வழி நடத்தலாம் என்ற உடன்படிக்கைப்படி தற்போது செயல்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில்தான் சசிகாலா சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. ஆனால் எதிர்பார்த்தப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் சசிகலா அதிமுகவின் தலைமையை பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறார். அவரது முயற்சியை கட்சியில் உள்ள ஒரு சில சீனியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே தவிர மற்ற நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிப்பதாகவே கூறப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் என்பது இருந்து வருகிறது. அது தேர்தல் நேரத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. கட்சி அலுவலகத்துக்கு இருவரும் வரும் போது அவர்களுடைய ஆதரவாளர்கள் தனித் தனியாக கோஷம் போட்டு அதை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இருவரும் எந்தவித பதிலும் கூறவில்லை.

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கட்சியிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களை சந்தித்த அவர், "ஊரக உள்ளாட்சி தேர்தல் என்றால் உள்ளூர் பிரச்னையை மையமாக வைத்துதான் நடக்கிறது. கட்சிகள் என்னதான் அரசியல் ரீதியாக கூட்டணி அமைத்தாலும், தலைவர்கள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டாலும், அதையும் தாண்டி கீழ் மட்டத்தில் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில வேட்பாளர்கள் போட்டியிடுவது இயற்கை. எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனையின்படி போட்டி வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களை அழைத்து பேசி கிட்டத்தட்ட 100 சதவீதம் சரி செய்யப்பட்டுவிட்டது.

தி.மு.க ஆளும் கட்சியாக வந்த 4 மாதங்களில் தேர்தலின்போது வழங்கிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டது என பெருமையாக கூறுகிறது. ஆனால் அவர்கள் முக்கியமாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த நீட் தேர்வு இன்று கானல் நீராகிவிட்டது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. 3 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதே போல், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடியில் சில சட்டதிட்டங்களை புகுத்தி 40 சதவீதம் பேர்தான் பயனடையும் நிலை உள்ளது. தி.மு.க ஆட்சி ஏமாற்றம் விதமாக தாலிக்கு தங்கம் திட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி, அம்மா இருசக்கர வாகன திட்டம் தேவைப்படாது என கூறுகின்றனர். ஜெயலலிதா கொண்டு வந்த காரணத்தால் இந்த திட்டத்தை கைவிட்டனர். இப்படி 4 மாதங்களிலேயே மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் கூட வருத்தப்படும் நிலை இன்றைக்கு இருக்கிறது. தி.மு.க ஆட்சி ஏமாற்றத்தை தந்துள்ளது. இது நிச்சயம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அறிக்கைகள் விடுகின்றனர். சட்டமன்றத்திலும் இணைந்துதான் பணியாற்றினர். ஒருங்கிணைப்பாளர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியால், அவர் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை ஒருங்கிணைப்பாளர் முதற்கட்டமாக 9 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அங்கிருந்தே எங்களுக்கு ஆலோசனைகள் கூறுகிறார். இரண்டு பேரும் ஒருமித்த கருத்துடன் தான் உள்ளனர். இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்துவிட்டோம். இதில் ஒருமித்த கருத்துடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எந்தவித கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனவே அதில் எந்த பிரச்னையும் எழ வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் அனைவரின் கருத்துத்தும் இதுவாகவே இருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலர் எடப்பாடியின் ஆதரவாளராகவும், ஒரு சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருக்கின்றனர். தொண்டர்களோ கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதுதான் அ.தி.மு.க.வில் நிகழும் நிதர்சனமான உண்மை.


அதானி பள்ளி மாணவர்கள், காந்தி ஜெயந்தி விழா, அமகதாபாத், Adani School Students, Gandhi Jayanti Festival, Ahmedabad
மாவட்டம்,தமிழ்நாடு

``மகாத்மாவுக்கு வணக்கம்" என்ற தலைப்பில், அகமதாபாத்தில் உள்ள அதானி வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவிகள் காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அதானி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக மகாத்மா காந்தியின் பெரும் பங்களிப்பை பறைசாற்றும் விதமாக சபர்மதி ஆசிரமம் திகழ்கிறது. இந்த நிலையில், காந்தியின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு ``மகாத்மாவுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் அகமதாபாத்தில் உள்ள அதானி வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான 32 மாணவர்கள், சர்தார் வல்லபாய் பட்டேல் உள்நாட்டு விமான நிலையத்தில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது தியாகங்களை பறைசாற்றும் வகையில் நிகழ்த்தி நடத்தினர்.

மேலும், அகிம்சை மூலம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த நமது தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு . அவரது வாழ்க்கையை நினைவுகூரும் மற்றும் கலைப் பாதையில் அவரது மதிப்புகளை நினைவுகூரும் ஒரு தாழ்மையான முயற்சியாக "மகாத்மாவுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் அதானி பள்ளி மாணவ, மாணவிகள் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியை நடத்தினர். இது மாணவர்களை மட்டுமல்ல, விமான நிலையத்தில் உள்ள பயணிகளையும் ஊக்குவிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு காந்திய கொள்கைகளை பிரதிபலிக்க மற்றும் நம்புவதற்கு தூண்டுகோலாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் அறங்காவலர் ஸ்ரீமதி ஷிலின் அதானி, "மாணவர்கள் இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்து கொள்ளவும் பெருமை கொள்ளவும் விரும்புகிறார்கள். தனது தாய்நாடு மற்றும் மக்கள் மீதான அன்புதான் அவரை சுதந்திரத்திற்காக போராடவும் சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராடவும் செய்தது. அகிம்சை, சத்தியாகிரகம், தூய்மை மற்றும் சுதேசி இயக்கம் போன்ற பல விஷயங்களை காந்தி ஊக்குவித்தார்" என்று கூறினார்.


இயற்பியல், நோபல் பரிசு, விஞ்ஞானிகள், Physics, Nobel Prize, Scientists
உலகம்,முதன்மை செய்தி

இயற்பியல் துறைக்கான இந்தாண்டின் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2021ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகளுக்கு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மேன், இத்தாலியின் ஜியார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்படுகிறது.

புவிவெப்பமயமாதலை நம்பகத்தன்மை உள்ள வகையில் கண்டறியும் முறைக்காக மனாபே, ஹாசில்மேன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சிக்கலான இயற்பியல் கட்டமைப்புகள் குறித்த விளக்கத்திற்காக ஜியார்ஜியோ பாரிசிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நோபல் விருதுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.


மருத்துவம், நீட் தேர்வு, உச்சநீதிமன்றம், Medicine, NEET Exam, Supreme Court
இந்தியா,முதன்மை செய்தி

``நாட்டில் மருத்துவப் படிப்புகள் முழுமையாக வணிகமயமாகி விட்டது'' என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசு கடந்த ஜூலையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அந்த அறிக்கை வெளியிட்ட பிறகு, அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதாவது நீட் எஸ்எஸ் தேர்வில் 60% கேள்விகள் குறிப்பிட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு சார்ந்தவையாகவும் 40% கேள்விகள் பொது மருத்துவம் சார்ந்தவையாகவும் இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் நீட் எஸ்எஸ் தேர்வில் 100% வினாக்களும் பொது மருத்துவம் சார்ந்ததாகவே இருக்கும் என மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 41 முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த டாக்டர்கள், சுப்ரீம்கோர்ட்டில் நீட் எஸ்எஸ் பாடத்திட்ட மாற்றத்தை எதிர்த்து ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், பிவி நாகரத்னா விசாரித்து வருகின்றன. கடந்த முறை விசாரணையின் போது, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தயார் ஆவதற்காக ஜனவரிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'நீட்-எஸ்எஸ் தேர்வை மாற்றிக் கொண்டு இருப்பது நாட்டின் மருத்துவக் கல்வி தரத்திற்கு உகந்த செயல் அல்ல. நவம்பரில் நடைபெற வேண்டிய தேர்வுக்கு ஆகஸ்ட் மாதம் பாடத் திட்டத்தை மாற்றம் செய்கிறார்கள். மாணவர்கள் மனு தாக்கல் செய்தவுடன் ஜனவரி மாதம் தேர்வை ஒத்திவைக்கிறார்கள். இவை எதுவும் நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு நல்லதாக தெரியவில்லை.

நாட்டில் மருத்துவப் படிப்புகள் முழுமையாக வணிகமயமாகிவிட்டது. மருத்துவக் கல்வியும் ஒழுங்காற்று விதிகளும் வணிகமயமாகிவிட்டன. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை நிரப்பவே அவசரம் காட்டப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாக இருந்துவிடக் கூடாது என்ற நோக்கம் தெரிகிறது. பல ஆண்டுகளாக தேர்வுக்குத் தயாராகிவரும் மருத்துவர்களுக்கு வினாத்தாள் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது' என்று காட்டமாக தெரிவித்த நிலையில் வழக்கை ஒத்திவைத்தனர்.


உள்ளாட்சித் தேர்தல், வாக்குப்பதிவு, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், Local Election, Polling, TN Election Commissioner Palanikumar
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில், சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மஹாயாள அமாவாசை, மழை காரணமாக வாக்குப்பதிவில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 (இன்று) மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன் அடிப்படையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பல்வேறு பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 12,318 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 129 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என 39,408 பேர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரித்தவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மஹாயாள அமாவாசை, மழை காரணமாக வாக்குப்பதிவில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பொன்னங்குப்பத்தில் தேர்தலை மக்கள் புறக்கணித்தனர். தனி ஊராட்சி கோரிய மக்களுடன் ஆட்சியர், காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில், சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 74 மையங்களில் எண்ணப்பட உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் காலை 9 மணி வரை 10.78% வாக்குகள் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6.90% வாக்குகள் பதிவாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிசெய்யும் பணிகள் அக்டோபர் 17க்கு பின் தொடங்கப்படும்" என கூறினார்.


லக்கிம்பூர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உபி அரசு, பாஜக, காங்கிரஸ், Lakhimpur, Rahul Gandhi, Priyanka Gandhi, UP government, BJP, Congress
அரசியல்,முதன்மை செய்தி

விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், காங்கிரசும் அரசியலாக்க முயற்சி செய்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் லக்கிம்பூருக்கு செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு உபி அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் சொந்த காரில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால் லக்னோ ஏர்போர்ட்டில் ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையில் நடந்து சென்ற விவசாயிகள் கூட்டத்தில், பாஜ.வினரின் கார் தாறுமாறாக ஓடி பலர் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் பலியாயினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கி உள்ளது. விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள உபி அரசு, எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் நுழைய விடாமல் தடுத்து வந்தது. இதனிடையே காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக இது குறித்து காங்கிரஸ் மீது விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் சம்பித் பத்ரா, "விவசாயிகள் இறந்த விவகாரத்தை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உ.பி. அரசு விசாரணை தொடங்க முடிவு செய்துள்ளது. பிரேத பரிசோதனை தொடர்பாக கேள்வி எழுப்ப ராகுல் காந்தி என்ன மருத்துவரா?. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் விவசாயிகள் மீது நடந்த தடியடி பற்றி ராகுல் காந்தி ஏன் கேள்வி கேட்கவில்லை?" என்று கூறினார்.

இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ள உபி அரசு, 5 பேர் மட்டும் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. உபி அரசின் அனுமதியால் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி லக்கிம்பூர் செல்ல இருந்தார்.

இதனிடையே, நாங்கள் அனுமதிக்கும் காரில்தான் லக்கீம்யூர் செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் ராகுல் காந்தியிடம் நிபந்தனை விதித்தனர். இதனை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, எனது காரில்தான் செல்வேன் என்று கூறினார். இதனை ஏற்க காவல்துறை மறுத்துவிட்டது. இதனால் லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி, பஞ்சாப், சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


கோவிஷீல்டு தடுப்பூசி, இந்தியர்கள், இங்கிலாந்து, covishield Vaccine, Indians, England
உலகம்,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

"கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர எந்த தடையும் இல்ல" என இங்கிலாந்து அரசு திடீரென அறிவித்துள்ளது.

உலகில் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் போதும் சில தடுப்பூசிகள் மட்டுமே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிக்க மறுத்து வந்தது.

இந்தியாவில் இருந்து வருவோர் கோவிஷீல்டு தடுப்பூசியை 2 தவணைகள் செலுத்திய போதும் தங்கள் நாட்டுக்குள் வரும் போது 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவித்தது. இது இந்திய பயணிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவிஷீல்டு உள்பட தங்கள் நாட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வரும் 11ம் தேதி முதல் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு இந்திய பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே உற்பத்தி அதிகரித்துள்ளதால் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல் ஈரானுக்கு 10 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை அனுப்பவும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வீட்டு கடன், தனி நபர் கடன், ரெப்போ வட்டி, ரிசர்வ் வங்கி, சக்தி காந்ததாஸ், Shaktikanta Das, RBI, HomeLoan
வணிகம்,முதன்மை செய்தி

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கூடும். இதன்படி, 2 நாட்கள் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிவடைந்து அதன் முடிவுகளை இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி, அனைவரும் கணித்தபடியே ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை. தொடர்ந்து 4 சதவீதமாக இருக்கும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 3.35 சதவீதம் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம் வட்டி விகிதங்களில் எட்டாவது முறையாக மாற்றங்கள் செய்யாமல் பழைய நிலையிலேயே நீடிக்க ரிசா்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறையக் கட்டாயம் வாய்ப்பு இல்லை. இதன் மூலம் கனவு வீட்டை வாங்கத் திட்டமிடுவோர் தற்போது வங்கிகளில் இருக்கும் மிகவும் குறைவான வட்டி விகிதத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமும் குறையாது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், '2021 - 22 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2021-22 இரண்டாம் காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.1 சதவீதமாகவும் இருக்கும். 2022- 23ம் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும்.2022 நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.3% ஆக இருக்கும். 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.2% ஆக இருக்கும்' என்று தெரிவித்தார்.


பாலியல் வழக்கு, கொலை வழக்கு, அரியானா,  குர்மீத் ராம் ரஹீம், சிபிஐ நீதிமன்றம், Sex case, murder case, Haryana, Gurmeet Ram Rahim, CBI court
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறையும், பத்திரிகையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் பெற்று சிறையில் உள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் மற்றொரு கொலை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரும் 12ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 2002ம் ஆண்டு சத்ரபதி என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக புலனாய்வு செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கிடையில் கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ‘பூரா சச்’ என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானது. இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளி என நீதிபதி சுஷில் கார்க் தீர்ப்பளித்தார்.இவருக்கான தண்டனை விவரம் அக்டோபர் 12ம் தேதி அறிவிக்கப்படுகிறது. முன்னதாக 2 பெண் பக்தர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.


கணவன், மனைவி, தீ விபத்து, மதுரை, Husband, wife, fire accident, Madurai
மாவட்டம்,மதுரை,தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் அருகேயுள்ளது எஸ்.பி.பி நகர். இந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தங்களது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியே வந்திருப்பதை பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் வீட்டின் கீழே படுத்து தூங்கி கொண்டிருந்த அவரின் குழந்தைகளும் பார்த்துள்ளனர்.

உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு மாடியில் உள்ள அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கணவன், மனைவியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி கண்ணன் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இரண்டு பேரும் தீ விபத்தில் உயிரிழந்திருப்பது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, அதிமுக, OPS, EPS, Sasikala, ADMK
கட்டுரை

ஓ.பி.எஸ்-சுடன் இணைந்து சசிகலா புதிய திட்டம் ஒன்றை அரங்கேற்ற இருக்கிறார். இதனால் அ.தி.மு.க.வில் கடுமையான சூறாவளி வீச போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் தமிழ்நாடு அரசியலில் பெரிய புயலை கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. ஆனால் ஏனோ சில காரணகளுக்காக தேர்தல் நடக்கும் நேரம் பார்த்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். அ.தி.மு.க.வின் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்பது எண்ணத்தில் இவர் இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது.

தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த சசிகலா, அ.தி.மு.க.வை மீட்க வேண்டும் என்று போன் கால் மூலம் நிர்வாகிகள் பலரிடம் பேசி வந்தார். அ.தி.மு.க, அமமுக நிர்வாகிகள் பலரிடமும் இவர் பேசிய ஆடியோக்களும் மீடியாக்களில் வெளிவந்தது.

அ.தி.மு.க.வை மீட்க வேண்டும், கட்சியை காக்க வேண்டும் என்று சசிகலா ஒவ்வொரு போன் காலிலும் சொன்னார். தொடக்கத்தில் வெளியான சில ஆடியோக்களை தவிர வேறு எதுவும் பெரிதாக அ.தி.மு.க. தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. அவரின் போன் கால் ஆடியோ எதுவும் பெரிதாக அதன்பின் கவனிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கள் குறித்து அ.தி.மு.க.வில் சீனியர்கள் யாரும் பெரிதுபடுத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் எதிர்ப்பு காரணமாக அ.தி.மு.க.விலும் சசிகலாவுக்கு இணைய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ் மட்டும் கொஞ்சம் சசிகலா ஆதரவு போல இருக்கிறார் என்று தகவல்கள் வந்தாலும் அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆடியோ வெளியீட்டுக்கு பின்னர் அமைதியாக இருந்த சசிகலா தற்போது மீண்டும் இரண்டாவது திட்டத்தை தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணத்தின் போது ஓ.பி.எஸ்ஸை மருத்துவமனைக்கே நேரில் சென்று சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சந்திப்பு ஓ பன்னீர்செல்வம்- சசிகலா இடையே கொஞ்சம் கசப்பை மறந்து, பிணைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் சில முக்கிய நிர்வாகிகள் சிலரும். சசிகலாவை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முணுமுணுத்ததாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் மட்டுமின்றி கட்சி மீது அதிருப்தியாக இருக்கும் வேறு சில நிர்வாகிகள் மத்தியிலும் சசிகலாவின் மதிப்பு உயர்ந்து உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

ஆளும் தி.மு.க. அரசோ பலரது மீது வழக்குகள் போட்டு வருகிறது. ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லை. இதுவே சசிகலா இருந்தாலாவது பெரிய அளவில் போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ செய்து இருப்பார் என்ற மனநிலைக்கு சில அ.தி.மு.க. தலைகள் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை கோடநாடு வழக்கு விவகாரத்தில் மன உளச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் எங்கே நம்மை காப்பாற்ற போகிறார் என்று அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிலர் புலம்பி வருகிறார்களாம். இந்த சந்தர்ப்பத்தை எப்படியாவது பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறாராம். அதற்காக ஒரு புதிய திட்டத்தை தீட்டி உள்ளாராம்.

அதேநேரத்தில் நமது எதிரி தி.மு.க.தான். நமக்குள்ளேயே சண்டை போட கூடாது என்று சசிகலா அ.தி.மு.க. தலைவர்களுக்கு தகவல் அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி, இம்மாதம் 16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா 17-ம் தேதி காலை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கும், ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கும் சசிகலா செல்கிறார்.

அதன் தொடர்ச்சியா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறாராம். இதன் மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்தை தன் பக்கம் திருப்பலாம் என்ற நினைப்பில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் மூலம் அ.தி.மு.க.விற்கு நுழைய மறைமுக திட்டங்கள் சிலவற்றையும் சசிகலா தீட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை சசிகலா கட்சிக்கு வருவதில் சிக்கல் இல்லை. ஆனால் அவர் மீண்டும் கட்சிக்குள் மொத்தமாக ஆதிக்கம் செலுத்த கூடாது. அவரும் ஒரு தலைவராக இருக்கலாம். அதிகார பகிர்வு இருக்கும். ஆனால் அவர் மட்டுமே அதிகாரம் பொருந்திய நபராக இருக்க முடியாது. இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் சசிகலா திட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒத்து கொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

சசிகலாவை தொடக்கத்தில் கடுமையாக எதிர்த்த எடப்பாடி பழனிசாமியும் இப்போது கொஞ்சம் அமைதியாகிவிட்டார். சசிகலா விஷயம் என்று இல்லை பொதுவாகவே கடந்த சில நாட்களாக எடப்பாடி ஏனோ அமைதியாக இருக்கிறார். அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு போது இவர் முக்கிய விஷயங்களை பேசுவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


கடலூர், திமுக, ரமேஷ் ஸ்டாலின், Cuddalore, DMK, Ramesh, Stalin
கடலூர்,அரசியல்,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

கடலூர் திமுக எம்.பி., ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ள நிலையில், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் திமுக நிர்வாகிகளுடன், கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிராமத்தில் திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து கோவிந்தராஜின் மகனுக்கு தொலைபேசி மூலமாக, உன் அப்பா கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ரமேஷின் உதவியாளர் தெரிவித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் கோவிந்ததாஜின் உடலை பார்த்துள்ளனர். அப்போது அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மறுநாள் இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மனு அளித்ததோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்த உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில், நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரமேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக எம்.பி ரமேஷ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தினார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


Vaiko, Political, Durai Vaiyapuri, வைகோ, துரை வையாபுரி, அரசியல்
தென்காசி,அரசியல்,முதன்மை செய்தி

"என் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய 5 ஊராட்சி 819 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. எனினும் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறும், மழையில் நனைந்தவாறும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் கலிங்கபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை ஓட்டுப்போட்டார். அவருடன் அவரது தம்பி வை.ரவிச்சந்திரன், மகன் துரை வையாபுரி ஆகியோரும் வாக்களித்தனர்.

வாக்களித்த பின்னர் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தற்போது 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். எனது மகன் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. நான் லட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடைபயணமாக சென்றுள்ளேன். மக்கள் பிரச்னைகளுக்காக நிறைய முறை சிறை சென்றுள்ளேன். இதனால் என் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை. வருகிற 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிர்வாகிகள் என்ன கூறுகிறார்களோ அதன்படி முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.


பெட்ரோல், டீசல், சென்னை, Petrol, Diesel, Chennai
தமிழ்நாடு,முதன்மை செய்தி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7வது நாளாக உயர்ந்து வருகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 7 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து, மக்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3ஐ தமிழக அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல் விலை ரூ.100க்குள் வந்தது. ஆனால், அதன் பின்னர் தொடரும் விலை உயர்வால், மீண்டும் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக 7வது நாளாக இன்றும் , பெட்ரோல் லிட்டருக்கு 26 காசும், டீசல் லிட்டருக்கு 33 காசும் அதிகரித்தது. அந்த அடிப்படையில், சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.101.53க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 26 காசு அதிகரித்து, ரூ.101.79 க்கு விற்கப்படுகிறது. மேலும், டீசல் ரூ.97.26க்கு விற்கப்பட்ட நிலையில், 33 காசு அதிகரித்து, ரூ.97.59க்கு விற்கப்படுகிறது.

தொடர் விலை உயர்வால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெட்ரோல் மீண்டும் ரூ.100ஐ கடந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், டீசலும் பெரும்பாலான இடங்களில் ரூ.97ஐ தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இதனால் கனரக வாகன உரிமையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களான தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்து உயர்ந்து வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த, ஒன்றிய பாஜக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


முந்திரி தொழிலாளி கொலை வழக்கு, திமுக எம்பி ரமேஷ், கடலூர், பண்ருட்டி நீதிமன்றம், Cashew worker murder case, DMK MP Ramesh, Cuddalore, Panruti court
மாவட்டம்,கடலூர்,அரசியல்,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். "என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வெளியே வருவேன்" என்று ரமேஷ் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், தனது தந்தையை ரமேஷ் எம்.பி. மற்றும் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி விசாரணையை தொடங்கினர். தீவிர விசாரணை நடந்து வந்த வேளையில், கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராசு சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ் (31), தொழிலாளர்கள் அல்லா பிச்சை (53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ் (31), வினோத் (31), கந்தவேல் (49) ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நடந்த விசாரணையின்போது எம்.பி.யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அல்லா பிச்சை உள்ளிட்ட 4 பேர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே திமுக எம்பி ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், "என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வெளியே வருவேன். நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எனக் கருதி சரணடைந்தேன்" என்று கூறியுள்ளார்.


கேரளா, உத்ரா கொலை, மனைவி கொலை, கணவன், கொல்லம் நீதிமன்றம், Kerala, Uthra murder, wife murder, husband, Kollam court
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

கேரளாவை உலுக்கிய இளம்பெண் உத்ரா கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் குற்றவாளி என்று கொல்லம் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொல்லத்தில் 2020 மே 7-ம் தேதி கருநாகத்தை கடிக்க வைத்து மனைவி உத்ராவை கொலை செய்ததாக சூரஜ் மீது வழக்கு தொடரப்பட்டது. மனைவியின் சொத்துகளை அபகரிப்பதற்காக அவரை கொலை செய்ய திட்டமிட்டார் சூரஜ். முதலில் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து கண்ணாடி விரியன் பாம்பை விட்டு கடிக்க வைத்தார். கண்ணாடி விரியன் பாம்பு கடித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உத்ரா சிகிச்சைக்கு பின் பிழைத்துக் கொண்டார். 2 மாதம் கழித்து கருநாகத்தை வாங்கி வந்து 7 நாள் பட்டினி போட்டு மனைவியை கடிக்க வைத்து கொலை செய்தார் சூரஜ்.

கேரள மாநிலத்தையே உலுக்கிய உத்ரா கொலை வழக்கை அறிவியல் பூர்வமாக அணுகி விசாரணை நடத்தியது போலீஸ். சாதாரணமாக பாம்பு கடிக்கும் போது, பற்களின் இடைவெளி 1.7 செமீ அளவிற்கு உடலில் பதிந்து இருக்கும். உத்ராவை கடித்த பாம்பின் பற்களின் அகலம் அவரது உடலில் 2.8 செமீ பதிந்து இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும் கண்ணாடி விரியன் மரம் ஏறாது என்ற அடிப்படையில் முதல் மாடிக்கு சென்று பாம்பு கடித்ததால் போலீசாருக்கும் சந்தேகம் வலுத்தது. இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியதால் கொலை செய்ததை சுரஜ் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சூரஜை கைது செய்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து வாதங்களுக்கும் முடிவடைந்த நிலையில், உத்ரா கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சூரஜின் தண்டனை விவரம் வரும் 13ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.


Police Encounter, Jharkhand robber, Sriperumbudur, ஸ்ரீபெரும்புதூர், ஜார்க்கண்ட் கொள்ளையன், போலீஸ் என்கவுன்ட்டர்
மாவட்டம்,காஞ்சிபுரம்,தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்ட ஜார்க்கண்ட் கொள்ளையன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிடம் 6 சவரன் நகையை வழிப்பறி செய்து அங்கிருந்து 2 வடமாநில இளைஞர்கள் தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போது கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். தப்பியோடிய கொள்ளையர்கள் பென்னலூர் ஏரி பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டனர். 10 குழுவினர் அந்த ஏரி பகுதியில் முகாமிட்டு கொள்ளையர்கள் தேடி வந்தனர். ட்ரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த காரணத்தினால் துப்பாக்கியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று இரவு முழுவதும் தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த ஏரி பகுதியில் பதுங்கி இருந்த ஒரு கொள்ளையனை பிடிக்க முயற்சிக்கும் போது அவர் தனது பாதுகாப்பிற்காக போலீசார் நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார். அப்போது தங்களது பாதுகாப்பிற்காக சம்மந்தப்பட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். தற்போது இறந்த கொள்ளையனின் உடலை ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையனின் பெயர் முர்தஷா என்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்றொரு கொள்ளையன் நைம் அக்தரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து துப்பாக்கி, 3 கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொள்ளையர்களுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? இறந்த கொள்ளையனின் விவரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சிலிண்டர், பால், இலங்கை, Srilanka, Cylinder, Gas cylinder, Milk
உலகம்,முதன்மை செய்தி

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 90 சதவிகிதம் வரை அதிகரித்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 8ம் தேதி வரை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், விலை அதிகரித்து 2,657 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் விற்பனையாகிறது. அதேபோல ஒரு லிட்டர் பால் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் சமூக வலைதளங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில், அந்நிய செலாவணியை குறைக்க, இறக்குமதி கட்டுப்பாட்டுகளை விதித்தது. இதனால் இலங்கையில் பால் பவுடர் முதல் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.


ஏகாம்பரநாதர் கோயில், கோயில் நிலம், அமைச்சர் சேகர் பாபு, பூந்தமல்லி, Ekambaranathar Temple, Temple Land, Minister Sekar Babu, Poonamallee
மாவட்டம்,திருவள்ளூர்,தமிழ்நாடு,முதன்மை செய்தி

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான நிலம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் இன்று அறநிலையத்துறை வசம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்டு இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது. இன்று 250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலைய துறை தன்வசபடுத்தி உள்ளது. முறையாக 78 நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தி உள்ளோம்.

அறநிலையத்துறையில் குறைகள் பதிவேடு துறை ஆரப்பித்தோம். இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்தோம். அதன் மூலம், இதுவரை 4500 குறைகள் வந்துள்ளன, மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம். விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹெச்.ராஜாவின் இந்து சமய அறநிலையத் துறை மீதான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் இந்து சமய அறநிலைத்துறை கருத்தில் கொள்ளாது. எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்று நினைத்துக்கொள்வோம். ஹெச்.ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல.

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழிபாட்டிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது விஜயதசமி அன்று கோவில் திறப்பது தொடர்பாக நீதிமன்றதில் வழக்கு நிலுவையில் உள்ளது, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மற்ற கோயில்களில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெறும்' என்றார்.


சென்னை வானிலை ஆய்வு மையம், வங்கக் கடல், மீனவர்கள், Chennai Meteorological Center, Bay of Bengal, Fishermen
மாவட்டம்,கிருஷ்ணகிரி,சேலம்,ஈரோடு,முதன்மை செய்தி

"அந்தமான் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும் இதனால் தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி , கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும் ஈரோடு தேனி திண்டுக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இன்று முதல் வருகின்ற 16ம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல், குமரி கடல், மன்னார் வளைகுடாப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட இடங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என அலர்ட் செய்யப்பட்டுள்ளது.


ஊராட்சித் தலைவர், பஞ்சாயத்து தலைவர், உள்ளாட்சித் தேர்தல், திருநெல்வேலி, சிவந்திப்பட்டி, Panchayat Leader, TN Local Election, Tirunelveli, Sivanthipatti
மாவட்டம்,திருநெல்வேலி,அரசியல்,முதன்மை செய்தி

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா என்பவர் வெற்றி பெற்றார். இவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று கொண்டார்.

அதே போல, திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட்டை இழக்கச் செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார்.


உள்ளாட்சித் தேர்தல், அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ், TN Local bady Election, ADMK, OPS, EPS
கட்டுரை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய தோல்வியை அ.தி.மு.க. எதிர்கொண்டிருக்கிறது. இந்த தோல்வியானது கட்சிக்கு இரட்டை தலைமை இருப்பதுதான் காரணமா? என்ற கோணத்தில் நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பம் நிலவுகிறதாம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தொடுக்கப்பட்டார். அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றனர். அ.தி.மு.க வரலாற்றில் முதல் முறையாக இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.

இரு தலைமை உருவாக்கப்பட்ட நாள் முதல் இரு தலைவர்களுக்கான ஆதரவாளர்கள் என சூழலும் அதிகரிக்க தொடங்கியது. மேலும் இந்த இரட்டை தலைமையின் காரணமாக அ.தி.மு.க. ஒவ்வொரு பிரச்சனையிலும் உட்கட்சி மோதல்களால் திணறித்தான் வருகின்றன.

அ.தி.மு.க. இரட்டை தலைமையுடன் செயல்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற அதிகாரத்துடன் இருந்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவர் பக்கமே இருந்தனர். இதை பயன்படுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலில் தான் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கினார்.

வேட்பாளர்கள் தேர்விலும் ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் தமது கை ஓங்கி இருக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாம் நினைத்ததையே சாதித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதவாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் இருவரும் இணைந்து செயல்படாமல் மோதல் போக்கை கடைபிடித்தனர். இதனால் தொடர் வெற்றியைப் பெற்ற அதிமுக தோல்வியைத்தான் சந்திக்க முடிந்தது. ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் பறிகொடுத்தது. ஆனாலும் ஒரு கவுரமான இடங்களை எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது அ.தி.மு.க.

சட்டசபை தேர்தல் முடிந்த பின்னரும் இரட்டை தலைமையின் அதிகார சண்டை ஓயவில்லை. யார் எதிர்க்கட்சித் தலைவர் என இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியாக அதிலும் எடப்பாடி பழனிசாமிதான் வென்றார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்கெனவே முடியாது என்கிற மனநிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பேச்சு எழுந்தது. அப்போதும்கூட எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. ஒருகட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேச வேண்டிய நிலையையும் உருவாக்கினார் எடப்பாடி பழனிசாமி.

இத்தனை குமுறல்களையும் மனதில் வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது பகிரங்கமாகவே சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து பேசினார். தேர்தலின் போது தலைவர்கள் மேற்கொண்ட வியூகங்களால்தான் அதிமுக தோற்றது என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அடுத்தடுத்த ஊழல்கள், கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்த விவாதங்கள் என உள்ளாட்சித் தேர்தல் களம் அத்தனையும் அதிமுகவுக்கு எதிராகவே இருந்தன. இதனைத்தான் தற்போதைய தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தி இருக்கின்றன.

அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது 2019-ல் நடத்திய உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு இணையான இடங்களைப் பெற்றது. ஆனால் இப்போது அதிமுக தலைவர்களே கனவிலும் நினைக்காத பெருந்தோல்வியை சந்தித்துள்ளனர். 140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெறும் 2 இடங்கள்தான் அதிமுகவுக்கு என்பதெல்லாம் சரித்திரம் காணாத தோல்விதான்.

அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 990 இடங்களில் திமுக வெற்றி பெற்ற நிலையில், 200 இடங்களுக்கே அதிமுக போராடுவதும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு மிகப் பெரும் துயர செய்திதான். அதிகாரத்தில் இருந்த போது பெருமிதத்துடன் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொன்ன இரட்டை தலைமை என்பது அதிமுகவுக்கு எப்படியான தேர்தல் முடிவுகளை தந்திருக்கிறது என்பது சுய பரிசோதனைக்குரியதாகவே அவர்கள் பார்த்தாக வேண்டும் என்று கட்சியினர் சீனியர்களின் குமுறலாக இருக்கிறதாம்.


Suraj, Kerala, Uthracase, கேரளா, கொல்லம் நீதிமன்றம், ஆயுள் தண்டனை
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

கேரள மாநிலம் கொல்லம் அருகே பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் குற்றவாளியான கணவர் சூரஜுக்கு கொல்லம் மாவட்ட நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேந்தவர் விஜயசேனன். அவரது மகள் உத்ரா (25). இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த சூரஜ் (27) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வருடம் மே 7ம் தேதி உத்ராவை பாம்பு கடித்ததாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உத்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை விஜயசேனன் அப்போதைய கொல்லம் எஸ்பி ஹரிசங்கரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் சூரஜ் தான் சொத்துகாக உத்ராவை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சூரஜ் மீது கொலை செய்தல், துன்புறுத்துதல், வனவிலங்கு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், சொத்துகாக உத்ராவை கொலை செய்ததாகவும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் இருந்து பாம்பை வாங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சுரேசையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை கொல்லம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் தீர்ப்பு அளித்தார். அதில், உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் கணவர் சூரஜ்க்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் குற்றவாளியாவார்,' எனத் தீர்ப்பளித்தார். இந்த நிலையில் இன்று குற்றவாளி சூரஜுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்துள்ளார். 4 ஆயுள் தண்டனையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, சூரஜுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தார்.


சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு, மழை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, Chennai Meteorological Center, Tamil Nadu, Rain, Nilgiris, Coimbatore, Erode, Salem, Cuddalore, Kallakurichi, Villupuram, Ranipettai
மாவட்டம்,நீலகிரி,கோயம்புத்தூர்,கடலூர்,சேலம்,ராணிப்பேட்டை,முதன்மை செய்தி

நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

17ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும். இன்று முதல் 16ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் , மன்னார் வளைகுடா பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.


விஜயபாஸ்கர், அதிமுக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ், Vijayabaskar, AIADMK, Anti Corruption Police
மாவட்டம்,புதுக்கோட்டை,அரசியல்,முதன்மை செய்தி

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.


விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாமனார், தங்கை, தம்பி  உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மார்ச் 31 வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் விஜயபாஸ்கர் சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் சி.விஜயபாஸ்கர் நடத்தி வந்துள்ளார். அறக்கட்டளை மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர், கல்லூரி என 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

பதவிக்காலத்தில் ரூ.6.6 லட்சத்துக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி. வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ. கார் வாங்கி இருக்கிறார். ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளும் வாங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய  நிலங்களை வாங்கியுள்ளார். லஞ்ச பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். அமைச்சராக இருந்த போது பல நிறுவன பங்குகளை ரூ. 28 கோடிக்கு வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது தான் மற்றும் மனைவி, 2 மகள்கள் பெயரில் ரூ.58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

வருமான வரித்துறை கணக்கின் படி 5 ஆண்டில் சி.விஜயபாஸ்கர் வருமானம் ரூ.58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளார். சி.விஜயபாஸ்கரும் ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். வருமானத்தை மீறி ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முல்லை பெரியாறு அணை, உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசு, கேரளா, Mullaiperiyar Dam, Supreme Court, Union Government, Kerala
தமிழ்நாடு,முதன்மை செய்தி

முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி அணையின் பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை குறைப்பதோடு அணையின் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய சர்வேதேச நிபுணர் குழு அமைக்க வேண்டும் என கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், "முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள், கதவுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள பழுதுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டது. இன்னும் எஞ்சிய சில பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும். முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி அணையின் பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை" என தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வருகின்ற 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.


ராமதாஸ், பாமக, உள்ளாட்சித் தேர்தல், அன்புமணி, Ramadoss, PMK, TN Local Election, Anbumani
கட்டுரை

உள்ளாட்சித் தேர்தலில் வடமாவட்டங்களில் கனிசமான இடங்களில் வெற்றி பெறும் கனவில் தனித்து களம் இறங்கியது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் 25 சதவீத வெற்றிக்கூட கிடைக்கவில்லை என்று கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டது. இதில் ஆளும் தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. அ.தி.மு.க. படுதோல்வியை தழுவியது. அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பா.ம.க. 47 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியை கைப்பற்றியது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வடமாவட்டங்களில்தான் அதிகம் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவதால் அதிக இடங்களை கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். பா.ம.க. தலைமையும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பா.ம.க.வுக்கு கிடைக்கவில்லை. இதனால் கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளானது.

இந்தநிலையில், பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட லர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், இனி பா.ம.க. செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டம், கூட்டணி நிலைப்பாடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம்.

"கட்சிக்கு யாரும் விசுவாசமாக வேலை செய்யவில்லை. அதனால்தான் வட மாவட்டங்களில் கூட நாம் எதிர்பார்த்த வெற்றியை நம்மால் பெற முடியவில்லை. இந்த தோல்வினால் நமக்கு இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டதாக தெரிகிறது. நமக்கு செல்வாக்கு உள்ள இடத்தையை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்" என்று நிர்வாகிகளை கடுமையாக சாடியிருக்கிறார் ராமதாஸ்.

"இனிமேல் கூட்டணி கிடையாது. யாராவது வேறு கட்சிக்கு மாற வேண்டும் என்று நினைத்தால் இப்போதே போய்விடுங்கள். இருப்பவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்.  அடுத்து வரக்கூடிய மாநகராட்சித் தேர்தல்களில் கடுமையாக உழைத்து வெற்றிபெற வேண்டும். இதை மனதில் வைத்து பணியாற்றுங்கள்" என்று மீண்டும் கோபத்தில் பேசினாராம் ராமதாஸ்.

விரைவில் எல்லா நிர்வாகிகளும் கிராம் கிராமமாக சென்று மக்கள் பணியாற்றி கட்சியை உறுதியாக நிலை நிறுத்துங்கள். அதற்கு விசுவாசமாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவையும் ராமதாஸ் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழ்நாடு, மழை, சென்னை வானிலை ஆய்வு மையம், கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, Tamil Nadu, Rain, Chennai Meteorological Center, Coimbatore, Erode, Tiruppur, Salem, Dharmapuri, Vellore, Ranipettai, Villupuram, Kallakurichi
மாவட்டம்,கோயம்புத்தூர்,ராமநாதபுரம்,திருப்பூர்,ஈரோடு,முதன்மை செய்தி

வெப்ப சலனம் காரணமாக இன்று கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் , வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 20-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

21ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி,கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வரும் 22ம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழையும்,  அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும்  பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  இன்று கேரள கடலோர பகுதி,  லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,  மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசு, ஐபிஎஸ், டிஜிபி, Shankar Jiwal, AK Viswanathan, TamilNadu Government, IPS, DGP
தமிழ்நாடு,முதன்மை செய்தி

சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால், முன்னாள் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர ஆணையர் பதவியில் இதுவரை ஏடிஜிபி அந்தஸ்துள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் டிஜிபி அந்தஸ்துள்ளவர்கள் வகிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி ஆபாஷ் குமார், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமா அகர்வால் ஆகியோருக்கும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது வகித்து வரும் பதவியில் டிஜிபி அந்தஸ்தில் தொடர்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயலகப் பணியில் டெல்லி உளவுப் பிரிவு இணை இயக்குநராக உள்ள டி.வி.ரவிச்சந்திரனுக்கும் டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர், நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன், காவல் துறை தலைமையக கூடுதல் டிஜிபியாகவும், தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அம்ரேஷ் புஜாரி சைபர் க்ரைம் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு, அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


கேரளா, மழை, நிலச்சரிவு, கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, Kerala, Rain, Landslide, Kottayam, Idukki, Pathanamthitta
இந்தியா,முதன்மை செய்தி

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ள நிலையில், நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிககனமழை கொட்டி தீர்த்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கி அதிகம் பேர் பலியாகினர். கோட்டயம் மாவட்டம் முண்டக்கயத்தில் மணிமலையார் நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் வீடு ஒன்று முழுமையாக அடித்து செல்லப்பட்டது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளை அடித்து சென்றது. வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகள், முகாம்கள் போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 24 மணி நேரமும் செயல்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கும் என தெரிவித்துள்ளார். இதனிடையே கேரளாவில் நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தி, தமிழ், சொமேட்டோ, கனிமொழி, Hindi, Tamil, Zomato, Kanimozhi
தமிழ்நாடு,முதன்மை செய்தி

இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என வாடிக்கையாளருக்கு, உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ அறிவுரை கூறி இருப்பதற்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியரை பணியில் இருந்து நீக்கியுள்ள அந்த நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் சொமேட்டோவின் வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது மொழி பிரச்னை இருப்பதாக சொமோட்டோ நிறுவனம் கூற, தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என விகாஷ் கூறியுள்ளார். அதற்கு, இந்தி நாட்டின் தேசிய மொழி. இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதனை படமாக எடுத்து விகாஷ் சமூகவலைதளங்களில் பதிவிட, சொமேட்டோவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி, ''குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

பலரும் சொமேட்டோவின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சொமோட்டோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ''வணக்கம்‌ தமிழ்நாடு! எங்கள்‌ வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ நடத்தைக்கு வருந்துகிறோம்‌. வேற்றுமையில்‌ ஒற்றுமை என்ற நம்‌ தேசத்தின்‌ மாறுபட்ட கலாச்சாரத்தின்‌ மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம்‌ காட்டிய ஊழியரை பணிநீக்கம்‌ செய்துள்ளோம்‌. பணிநீக்கம்‌ என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம்‌. மேலும்‌ மக்களின்‌ உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப்‌ பகிரக்கூடாது எனத்‌ தெளிவாக நாங்கள்‌ எங்கள்‌ முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்‌.

இந்த வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ அறிக்கைகள்‌ மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின்‌ நிலைப்பாட்டைக்‌ குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள்‌ முழு பயன்பாட்டிற்காக தமிழ்‌ செயலியை உருவாக்குகிறோம்‌. நாங்கள்‌ ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில்‌ சந்தைப்படுத்தல்‌ முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம்‌.

எ.கா. நாங்கள்‌ மாநிலத்திற்கான உள்ளூர்‌ பிராண்ட்‌ அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்‌. மேலும்‌ கோயம்புத்தூரில்‌ ஒரு உள்ளூர்‌ தமிழர்‌ கால்‌ சென்டர்‌ / சர்வீஸ்‌ சென்டரை உருவாக்கும்‌ பணியில்‌ உள்ளோம்‌. உணவு மற்றும்‌ மொழி ஒவ்வொரு மாநிலத்தின்‌, கலாச்சாரத்தின்‌ இரண்டு அடித்தளங்கள்‌ என்பதை நாங்கள்‌ புரிந்துள்ளோம்‌. அவை இரண்டையும்‌ நாங்கள்‌ முழுமையாக உணர்ந்துள்ளோம்‌ என மீண்டும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌'' என்று விளக்கம் அளித்துள்ளது.


இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள், கோட்டைப்பட்டினம், புதுக்கோட்டை, Sri Lanka Navy, Tamil Nadu Fishermen, Kottaipattinam, Pudukottai
புதுக்கோட்டை,தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு நொறுங்கியது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். 2 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் வளத்தை அழைப்பதாகக் கூறி இலங்கை வடக்குப் பகுதியில் மீனவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று இலங்கையின் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை கடலில் போராட்டங்கள் நடத்திய நிலையில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை பிடிக்க இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டனத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் இலங்கை காரைநகர் கோவலம் கடற்பகுதிக்குள் வந்ததாக கூறி அந்த படகுகளை விரட்டி சென்ற போது இலங்கை கடற்படையின் கப்பல் தமிழக மீனவரின் விசைப்படகு மீது மோதியது. இதில் மீனவர்களின் படகு நொறுங்கி கடலில் மூழ்கியது. அப்போது படகில் இருந்த 3 மீனவர்களில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட நிலையில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மாயமானார். அவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மாயமான மீனவர் ராஜ்கிரண் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கை கடற்படை கப்பல் தமிழக மீனவரின் படகு மீது மோதி மீனவர் உயிரிழந்த செய்தி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக, சசிகலா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ADMK, Sasikala, MGR, Jayalalithaa
அரசியல்,முதன்மை செய்தி

"அதிமுக நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது, வெற்றிப் பயணத்தை தொடருவோம்" என அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீரென கடிதம் எழுதியுள்ளார்.

டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், ‘அம்மா வழிநின்று கழகம் காப்போம் கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா என குறிப்பிட்டு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நிறை அன்புடைய சகோதர.. சகோதரிகளே! கழகத்தின் பேரன்புத் தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும், இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நாம் கழகத்தை இயக்குவோம்.

அண்ணா கண்ட வழியில்..., புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித்தலைவி அம்மா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம், பகை வெல்வோம். ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம்.

புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?, மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அஇஅதிமுக நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே... சிந்தியுங்கள், ‘காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி’ .

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே, நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம்” .
“ஒன்றுபடுவோம்...
வென்று காட்டுவோம்..
தலைவர் புகழ் ஓங்கட்டும்...
தலைவி புகழ் நிலைக்கட்டும்...”
பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும். தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது?தலைவியின் எத்தனை எத்தனை செயல்பாடுகள் மக்கள் வாழ்வை மாற்றிக் காட்டின? தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காக பயணிப்போம். சங்கமிப்போம், சாதிப்போம்.

கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம் வெற்றிப் பயணத்தை தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். புரட்சித் தலைவர் நாமம் வாழ்க... புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க... நன்றி வணக்கம்" என்று கூறியுள்ளார்.


பெட்ரோல், டீசல், மத்திய அரசு, பொதுமக்கள், Petrol, Diesel, Central Government, Public
தமிழ்நாடு,முதன்மை செய்தி

பெட்ரோல், டீசல் விலை நடப்பு மாதத்தில் 17 நாட்கள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கொந்தளிப்பில் மக்கள் இருக்கின்றனர்.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் (அக்டோபர்) கடந்த 1ம் தேதியில் இருந்து இன்று வரையிலான 20 நாட்களில், 3 நாட்களை தவிர மற்ற 17 நாட்களும் விலையேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.103.31க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை ரூ.98.92ல் இருந்து 34 காசுகள் உயர்ந்து ரூ.99.26க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கண்கொள்ளவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான வேதனையில் இருக்கின்றனர். வாக்களித்த மக்களை மத்திய அரசு வாட்டி வதைப்பதாக கொந்தளிக்கின்றனர்.


கோயில் அர்ச்சகர்கள், தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம், Temple Priests, TamilNadu Government, Chennai High Court
தமிழ்நாடு,முதன்மை செய்தி

கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளுக்கு எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளன. இந்த விதிகளை எதிர்த்து, டிஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயிலில் உள்ள பரம்பரை அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது. பரம்பரை அறங்காவலர்களை நியமித்து அவர்களை கொண்டுதான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும். மேலும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விதமான ஆகம விதிகள் உள்ளன. அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், அர்ச்சகர் பணி நியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆகம விதிகளை மீறி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 7 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.


சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஈபிஎஸ், அதிமுக, Sasikala, Edappadi Palanisamy, EPS, AIADMK
அரசியல்,முதன்மை செய்தி

அதிமுக பொது செயலாளர் என்று சசிகலா கூறி கொள்வது பற்றி எடப்பாடி பழனிசாமி உச்சபட்ச கோபத்தில் விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பொது செயலாளர் என சசிகலா கூறி கொள்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். கட்சியில் இல்லாத அவரை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

சூரியனை பார்த்து... (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் பாதிப்பு). அத நான் ஓபனா சொல்ல முடியாது. அதிமுகவின் கொடியை பயன்படுத்தியதற்காக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பொய்யான கல்வெட்டு வைத்த சசிகலா மீது அதிமுக நடவடிக்கை எடுக்கும்.

சசிகலா பொதுச் செயலாளர் என சொல்லி கொள்வதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அனைத்தும் நாங்களே அதிமுக என்று உறுதிப்படுத்திவிட்டது. பொழுது போகவில்லை என்பதற்காக சசிகலா ஏதோ செய்து கொண்டு இருக்கிறார்" என்று கிண்டல் செய்தார்.

அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு தனது பெயர் பொறித்த கல்வெட்டை சசிகலா திறந்து வைத்தது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா அந்த கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின்வாரியம், அண்ணாமலை, செந்தில் பாலாஜி, பாஜக, Tamil Nadu Electricity Board, Annamalai, Senthil Balaji, BJP
அரசியல்,முதன்மை செய்தி

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு விதித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 84 டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதிக விலைக்கு மது விற்பனை செய்த 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1,599 பார்கள் விதிகளை மீறி செயல்பட்டன. அவற்றில் 933 பார்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் புகார்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில் பார்கள் திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியபின் அறிவிப்பு வெளியிடுவார். இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்படவில்லை. நாங்கள் ஆய்வுக்கூட்டத்தில் கூட இது குறித்து பேசுவதில்லை. இனிவரும் காலங்களிலும் இலக்கு நிர்ணயம் இருக்காது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுக்க 38 மாவட்டங்களிலும் மாவட்ட மேலாளர்கள், பத்திரிகையாளர்களை உள்ளிடக்கிய வாட்ஸ் அப் குழுவினை தொடங்கப்படவில்லை. அந்த குழுவில் அமைச்சரும் இடம்பெற உள்ளதால் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. பல மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மின்தடை இல்லாத வகையில் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மின்சந்தையில் இதுவரை 1.04%தான் நாம் மொத்த தேவையில் கொள்முதல் செய்கிறோம். அதுவும் நிலக்கரி பற்றாக்குறையினால்தான். குஜராத்தான் அதிகம் வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்துள்ளது, அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளது. கடந்த கால ஆட்சியின் தவறுகளை சரிசெய்யும் வண்ணம்தான் தற்போது மின்வாரியத்தின் செயல்பாடுகள் உள்ளது.

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு நான் வர தயார். தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும், அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள். அதையும் சந்திக்க தயார்” என்று கூறியுள்ளார்.


சீனா, இந்தியா, சீன ராணுவம், இந்திய ராணுவம், China, India, Chinese Army, Indian Army
இந்தியா,முதன்மை செய்தி

சீனாவை ஒட்டிய எல்லை பகுதியில் உள்ள மலைகளில் விமானங்களை வீழ்த்தக்கூடிய அதிநவீன எல்70 ரக சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய- சீன படைகளிடையே கடந்த ஆண்டு லடாக் பகுதியில் மோதல் ஏற்பட்டதில் இருந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சீனாவும் எல்லையில் தனது படைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் ராணுவத்தினரை பயிற்சியிலும் ஈடுபடுத்தி வருகிறது.

இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் எல்70 ரக அதிநவீன விமான எதிர்ப்பு சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது. ஏற்கெனவே எம்777 ரக சிறு ஏவுகணைகள் போபர்ஸ் பீரங்கிகளை இந்தியா நிறுத்தி இருக்கும் நிலையில் அவற்றுடன் தற்போது எல்70 ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

எல்லையில் படைகளின் தயார்நிலை குறித்து ராணுவ மற்றும் விமான படை தளபதிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக எல்லையில் படைபலம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.


ஐஸ்கிரீம், கோவை, மா.சுப்பிரமணியன், Rolling Dough Cafe, Ice Cream, Coimbatore, Ma. Subramanian
கோயம்புத்தூர்,தமிழ்நாடு,முதன்மை செய்தி

கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடை தகவல் கிடைத்தவுடன் ஆய்வு செய்து கடைக்கு சீல் வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

கோவையில் பி.என்.பாளையம், அவிநாசி சாலையில் Rolling Dough Cafe எனும் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக, 20-10-2021 அன்று மதியம் 12.30 மணியளவில் புகார் பெறப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டது. காலாவாதியான உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. ஆய்வின்போது உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை. உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டது. முறையான பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை.

உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படவில்லை. உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலைஉறை மற்றும் கையுறை அணிந்து பணிபுரியவில்லை. உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்தது கண்டறியப்பட்டது. உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் இத்தகைய குறைபாடுகள் இருக்கும் காரணத்தினால் அந்த Rolling Dough Cafe எனும் ஐஸ்கிரீம் கடைக்கு உரிய உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பூசி, முககவசம், மாஸ்க், ராதாகிருஷ்ணன், Corona vaccine, mask, Radhakrishnan
தமிழ்நாடு,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

"குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலமும் தனது பங்கை செலுத்தி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் 5.14 கோடி அரசு மூலமாகமும், 26 லட்சம் டோஸ் தடுப்பூசி தனியார் மருத்துவமனை மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது நம்மிடம் 53.84 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். இதை கடமையுடன் கூடிய தளர்வுகள் என மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்`` என தெரிவித்தார்.


ஈபிஎஸ், கூட்டுறவு வங்கி, இளங்கோவன், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு, EPS, Cooperative Bank, Elangovan, Anti Corruption Raid
சேலம்,அரசியல்,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் அதிமுகவின் ஜெ.பேரவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் இளங்கோவன். இந்த நிலையில், சேலத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் உள்ள 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் இளங்கோவன். திருச்சியில் முசிறியில் இளங்கோவனுக்கு சொந்தமான பாலிடெக்னிக், கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலத்தில் சேலம் மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குபேந்திரன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணை தலைவராகவும் குபேந்திரன் உள்ளார்.

சேலம் இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 -2020 வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில், ரூ.3.78 கோடி சொத்துகளை குவித்ததாக இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அன்புமணி, சிபிஎஸ்இ, தமிழ் மொழி, Anbumani, CBSE, Tamil Language
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

"தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்த சிபிஎஸ்இ முயல்கிறது" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நவம்பர் 17ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் இந்தி & ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மைப் பாடங்களாகவும் (Major Subjects), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத (Minor Subjects) பாடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுக்கான பாடங்களை முதன்மைப் பாடங்கள், முக்கியத்துவம் இல்லாத பாடங்கள் என பிரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு வகைப்படுத்துவதன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்த சிபிஎஸ்இ முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவிப்பதன் மூலம் அவற்றை மாணவர்கள் விரும்பிப் படிக்காத நிலை உருவாகி விடும். அந்த வகையில் இது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல் தான். இதை சி.பி.எஸ்.இ கைவிட வேண்டும்!

முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களுக்கானத் தேர்வை சி.பி.எஸ்.இ அமைப்பே நேரடியாக நடத்தி மதிப்பெண் வழங்குமாம். முக்கியத்துவம் இல்லாத பாடங்களுக்கானத் தேர்வுகளை அந்தந்த பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாமாம். இது நியாயமல்ல" என்று கூறியுள்ளார்.


செந்தில் பாலாஜி, அண்ணாமலை, பாஜக, மின்சார வாரியம், Annamalai, BJP, Minister Senthil Balaji
அரசியல்,முதன்மை செய்தி

"பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயார்" என்று மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில்பாலாஜி சவால் விடுத்தார்.

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதில், கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை என்றும் அதற்கான ஆதாரயத்தை வெளியிட தயார் என்று கூறி இருந்தார்.

அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை ஆதாரம் உள்ளது என்று கூறுகிறார். எப்போது எங்கே அவர் அதை வெளியிட்டாலும் நான் வர தயார். ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "மின்சார விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்" என்று கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சமூக வலைத்தளங்களில் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது. அதுவும் பொதுவெளியில் அண்ணாமலை போன்றோர் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி சுமத்தக்கூடாது. அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சும்மா பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறேன். அரசின் மீது ஆதாரத்துடன் குற்றம் சுமத்தினால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். மின்துறையில் அனைத்து திட்ட பணிகளையும் வெளிப்படை தன்மையுடன் அரசு நிறைவேற்றி வருகிறது என்று கூறினார்.


செல்லூர் ராஜூ, அதிமுக, Sellur raju, ADMK
மதுரை,தமிழ்நாடு,முதன்மை செய்தி

``அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்.” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வரும் 24ம் தேதி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு ஓ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். 30ம் தேதி பசும்பொன் செல்லும் முன் கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் சிலைக்கு மாலை மரியாதை செய்ய உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை. கருணாநிதி காலத்திலேயே சோதனைகளை சந்தித்து உள்ளோம். எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்தோம், இப்போது அச்சுறுத்தலில் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்” என்று கூறினார்.


சென்னை, பெட்ரோல், டீசல், Chennai. Petrol, Diesel
முகப்பு,தமிழ்நாடு,முதன்மை செய்தி

தொடரும் உச்சமாக, சென்னையில் டீசல் விலை சதம் அடித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.22க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ.100.25க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தில் ஒவ்வொரு நாளும் முத்திரை பதித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு விலை குறைந்து வந்த நிலையில், பெட்ரோல் கடந்த மாதம் 28ம் தேதி முதல் அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 16ம் தேதி வரலாறு காணாத புதிய உயர்வை எட்டியது. அதேபோல், டீசலும் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து கிடுகிடு வென உயரத் தொடங்கி, தினமும் உச்சத்தை தொட்டு கொண்டே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 31 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 103 ரூபாய் 92 காசுக்கு விற்பனை ஆனது. டீசலை பொறுத்தவரையில் லிட்டருக்கு 33 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 99 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே தினமும் பெட்ரோல் 33 காசும், டீசல் 31 காசும் உயர்ந்து கொண்டே வருகிறது.

அந்தவகையில் இன்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.104.22 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.100.25 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.


தமிழக அரசு, தமிழக அரசு ஊழியர்கள், முதல்வர் ஸ்டாலின், தீபாவளி போனஸ், TamilNadu Government, Tamil Nadu Government Employees, Chief Minister Stalin, Deepavali Bonus
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு, 2020-2021ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து இருந்த நிலையில், கோவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக, பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது. குறிப்பாக, அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கபட்டுள்ளன.

இதன் காரணமாக, ஏறத்தாழ அனைத்து வணிக நடவடிக்கைள், குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள், பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

லாபம் ஈட்டியுள்ள / நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என, மொத்தம் 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400 பெறுவர். மொத்தத்தில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாதி, சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு, Caste, Chennai High Court, Tamil Nadu Government
கோயம்புத்தூர்,தமிழ்நாடு,முதன்மை செய்தி

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதை பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மரணம் அடைந்த பிறகும்கூட சாதி மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது வேதனையான விஷயம். மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும். மயானம் என அறிவிக்கப்படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது'' என்று உத்தரவிட்டார்.


இந்தியா, கொரோனா, இந்தியர்கள், India, Coronavirus, Indians
இந்தியா,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் மனிதர்களில் சராசரி ஆயுள் காலம் 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பல அலைகளாக தாக்க தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

தற்போதை நிலையில் தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இதனால் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் மனிதர்களில் சராசரி ஆயுள் காலம் 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த மக்கள் தொகை ஆய்வுக்கான சர்வதேச மையம் என்ற அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஆண்களின் சராசரி வயது 69.5 ஆகவும், பெண்களின் சராசரி வயது 72 ஆகவும் இருந்ததாக அம்மய்யத்தின் பேராசிரியர் சூரியகாந்தி யாதவ் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு இது ஆண்டுகளுக்கு 67.5 ஆகவும், பெண்களுக்கு 69-8 ஆகவும் குறைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். எனினும் கொரோனா சூழல் முழுமையும் கட்டுக்குள் வரும் பட்சத்தில் சராசரி ஆயுள் காலம் மீண்டும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


அபுதாபி, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், தென் ஆப்பிரிக்கா, Abu Dhabi, T20WorldCup, South Africa, Australia
விளையாட்டு,முதன்மை செய்தி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 119 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் அபுதாபி மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டி காக்- டிர் டுசென் களமிறங்கினர். இந்த ஜோடி சிறிது நேரம் கூட நீடிக்கக்கவில்லை. 2 ரன்னில் டுசென் ஆட்டம் இழக்க மார்க்ரம் களம் கண்டார். இவர் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்குபிடித்து விளையாடினார்.

மறுமுனையில் விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் டி காக் 7 ரன்னில் வீழ்ந்தார். பின்னர், மார்க்ரம்முடன் ஜோடி சேர்ந்த க்ளாசென் 13 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து டேவிட் மில்லர் ஓரளவு தாக்குபிடித்து 16 ரன்கள் அடித்தார். பின்னர் வந்த ப்ரிடோரிஸ் ஒரு ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த மகராஜ் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினார். மறுமுனையில் நன்றாக விளையாடி வந்த மார்க்ரம் 40 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து, நோர்க்யா- ரபாடா ஜோடி சேர்ந்தனர். இவர்கள் 18வது ஓவரில் அணியின் ஸ்கோரை 101ஆக உயர்த்தினர். 19.1 ஓவரில் ரபாடா அபார சிக்சர் விளாசினார். 4வது பந்தில் நோர்க்யா 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்த 118 ரன்கள் எடுத்துள்ளது. 19 ரன்னில் கடைசி வரை ரபாடா ஆட்டம் இழக்கவில்லை. முதல் ஆட்டத்திலேயே தென் ஆப்பிரிக்கா அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 1 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல் 1 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும், ஆடம் 2 விக்கெட்டும் எடுத்தனர். 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.


பி.எஸ்.சி நர்சிங், பி.பாா்ம்., ரேடியோகிராபி படிப்பு, தமிழக அரசு மருத்துவ கல்வி இயக்ககம்
தமிழ்நாடு,முதன்மை செய்தி

மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி நர்சிங், பி.பாா்ம்., ரேடியோகிராபி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நா்சிங், பி.பாா்ம், ரேடியோகிராபி உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு மாணவா் சோக்கைக்கு இணையதளத்தில் பதிவு செய்வது இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. இதனை http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நவம்பா் 8ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளா், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவம்பா் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சசிகலா, அதிமுக, எடப்பாடி பழனிசாமி, Sasikala, ADMK, Edapadi Palanisamy
கட்டுரை

சசிகலா மேற்கொள்ள உள்ள அரசியல் ரீதியான சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஏற்கெனவே அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டத்தின் போது, சசிகலா மேற்கொண்ட நிகழ்ச்சிகளே அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் வெளிப்பாடாகதான் சசிகலா மீது எடப்பாடி பழனிசாமியும், ஜெயக்குமாரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்தநிலையில், வரும் 27ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சில மாவட்டங்களில் அரசியல் ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தும் என்றே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி பிரிந்தபோது, எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கி ஜெயலலிதாவுக்கு வழி விட்டது போல் சசிகலாவும் தற்போதைய அதிமுக தலைமைக்கு வழிவிட்டு பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே எடப்பாடி தரப்பின் விருப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.க.வில் உள்ள சில சீனியர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன. அதையொட்டியே செய்திகளும் வெளி வருகின்றன. ஆனால் சசிகலாவோ முடிந்தவரை அ.தி.மு.கவை தன்பக்கம் இருக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியைவிட்டுவிட்டு அமமுகவை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம் என டி.டி.வி.தினகரன் சசிகலாவிடம் கூறி வருவதாகவும், அதற்கு சசிகலா உறுதியாக எந்தவித உத்தரவாதமும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், சென்னையில் நடந்த சசிகலாவின் இரு நாள் நிகழ்ச்சிகள் அதிமுக தலைமையை அசைத்துப் பார்த்தாலும் மீடியாக்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே செல்லலாம். ஆகையால் தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர். அது மீடியாக்கள் மூலமாக தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்றும் சசிகலா திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சசிகலாவின் சுற்றுப் பயணம் தொடங்க இன்னும் இரு நாள்களே உள்ளன. தஞ்சை பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் தினகரன் மகள் திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமணத்துக்கு தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள முடியாத நிலையில் தஞ்சையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொண்டர்களிடம் குடும்பமாக வரவேண்டும் என அழைத்துள்ள தினகரன் அறுசுவை விருந்தையும் ஏற்பாடு செய்துள்ளார்.

சசிகலா ஆதரவாளர்கள், அமமுக தொண்டர்கள் என புதன் கிழமை தஞ்சையில் பெரிய கூட்டத்தை கூட்டி தங்களது செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர். 27-ம் தேதி தஞ்சாவூர், 28-ம் தேதி மதுரை, திருநெல்வேலி, 29-ம் தேதி பசும்பொன் விழா என அனைத்து இடங்களிலும் சசிகலா தொண்டர் படை சூழ வலம் வரவுள்ளார்.

சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறாராம். குறிப்பாக சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது சசிகலா வரும் போது அ.தி.மு.க. நிர்வாகிகளோ, தொண்டர்களோ சசிகலாவை சந்திக்கவும் கூடாது, நிகழ்ச்சியில் பங்கேற்கவும் கூடாது என்று உத்தரவை பிறப்பித்து இருக்காராம். அதே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ், சசிகலா விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருவது நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதை வைத்த பார்க்கும் போது சசிகலாவின் சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அளவில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதேபோன்று அவரது ஆதரவாளர்களும் பீதியில்தான் இருக்கிறார்களாம்.


ரஜினி, தாதா சாகேப் பால்கே விருது. விஜய் சேதுபதி, பார்த்திபன், தேசிய விருது, Rajini, DadaSaheb Phalke Award. Vijay Sethupathi, Parthiban, National Award
சினிமா,முதன்மை செய்தி

நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இந்த விருந்தினை வழங்கினார்.

இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2019ம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த்திரையுலகம் வென்றுள்ளது. இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டது. விருதை தயாரிப்பாளர் எஸ். தாணு பெற்றார். அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு விருது வழங்கி வெங்கையா நாயுடு கவுரவித்தார்.

நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தனுஷ் முறையே இந்தி திரைப்படம் 'போன்ஸ்லே' மற்றும் தமிழ் திரைப்படமான 'அசுரன்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

நடிகை கங்கனா ரனாவத் 'மணிகர்னிகா ஜான்சி ராணி' மற்றும் 'பங்கா' படங்களுக்காக சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது டி. இமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு அளவு 7 படத்திற்கு ஜூரி சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிக்கலவை விருது வழங்கப்பட்டது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு கிடைத்து உள்ளது.


நடிகர் விஜய், சென்னை உயர்நீதிமன்றம், கார் வழக்கு, Actor Vijay, Chennai High Court, car case
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது அந்த வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து காரை இறக்குமதி செய்தபோது இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரியை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த முறை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அவர் அதனை தள்ளுபடி செய்து நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், மீண்டும் இன்று நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்க வேண்டும். தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தும் வகையில் இருந்தது. இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்து குற்றவாளி போல காட்டியுள்ளது. வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

தொடர்ந்து நுழைவு வரி செலுத்தவில்லை, வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்து. நிலுவை வரித்தொகையான ரூ.32.30 லட்சத்தை ஆகஸ்ட் 7ம் தேதி செலுத்திவிட்டோம். கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சிப்பது தேவையற்றது. தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு" " என வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், கருத்துக்களை நீக்கக்கோரும் விஜய் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.


Sasikala, EPS, OPS, ADMK, சசிகலா, ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக
மதுரை,அரசியல்,முதன்மை செய்தி

எடப்பாடி பழனிசாமி சசிகலாவை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்" என்று குட்டுவைத்தார். சசிகலாவுக்கு திடீரென ஓபிஎஸ் வக்காலத்து வாங்கியிருப்பது அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி பொதுச்செயலாளர் என்ற பெயருடன் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா நலத்திட்ட உதவிகளை செய்தார். தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். இது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அவரை சட்டரீதியாக சந்திப்போம் என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின் போது, 'சூரியனை பார்த்து... (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் பாதிப்பு). அத நான் ஓபனா சொல்ல முடியாது,' என்று எடப்பாடி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வத்திடம், எடப்பாடி பழனிசாமி சசிகலாவை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும். அதிமுக தொண்டர்கள் முதல் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வரை அவை நாகரீகத்தோடு பேச வேண்டும் என்றார்.

சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்றும் ஓபிஎஸ் கூறினார்.

இதனிடையே சசிகலா குறித்து ஓபிஎஸ் தெரிவித்து கருத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""சசிகலா, அவரை சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் கூறினார். சசிகலா, அவரை சார்ந்தவர்களை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் பேசியதை முழுமையாக பார்த்துவிட்டு நான் விளக்கம் அளிக்கிறேன். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.


ரயில் டிக்கெட், தெற்கு ரயில்வே, பயணிகள், Train tickets, Southern Railway, Train Passengers
தமிழ்நாடு,முதன்மை செய்தி

நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 23 ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கவும் முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர வேலையாக ரயிலில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் சற்று சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

23 ரயில்களில் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு ரெயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவில்லா ரயில்பெட்டிகளில் பழைய முறைப்படி முன்பதிவின்றி பயணிக்கலாம். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளது. கோவை - நாகர்கோவில் , திருச்சி - திருவனந்தபுரம் இடையேயான ரயில்களிலும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.


வடகிழக்கு பருவ மழை, தமிழக கலெக்டர்கள், முதல்வர் ஸ்டாலின், Northeast Monsoon, Tamil Nadu Collectors, Chief Minister Stalin
மாவட்டம்,தமிழ்நாடு,முதன்மை செய்தி

``இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் காலத்தில் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளாகிய உங்களுக்கும்தான் இருக்கிறது'' என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களை அலர்ட் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், இந்த அவசரக் கூட்டத்தை நமது அரசு ஏற்பாடு செய்திருக்கிறது என்று சொல்வதைவிட, இயற்கை ஏற்பாடு செய்திருக்கிறது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இயற்கையோட அழைப்பை ஏற்று இங்கே கூடி இருக்கிறோம். இயற்கையை முறையாகக் கையாண்டால் அது கொடை! முறையாகக் கையாளவில்லை என்று சொன்னால், அதுவே பேரிடராக மாறிவிடும். இயற்கையை முறையாக எதிர்கொள்வதற்கு தவறும்போது, அது, தான் யார் என்பதை நமக்கு சுட்டிக்காட்டிவிட்டுச் சென்று விடுகிறது.

எனவே, இயற்கையை கொடையாக எதிர்கொள்ளப் போகிறோமா அல்லது பேரிடராக மாற்றப் போகிறோமா என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது. இயற்கையின் சூழலானது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக அதன் மாறுதல் புதிராக இருக்கின்றது. குறிப்பிட்ட காலம் மழைக்காலம், குறிப்பிட்ட காலம் கோடைக்காலம் என்று வரையறுக்க முடியாத அளவுக்கு காலமாற்றம் இப்போது கடுமையாகி வருவதை அதிகாரிகள் அனைவரும் முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் காலத்தில் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளாகிய உங்களுக்கும்தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுப்பது மட்டுமல்ல, எத்தகைய பேரிடரையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும். தமிழ்நாட்டில் இன்று முதல், வடகிழக்குப் பருவமழை துவங்கப் போகிறது என்றும், இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தமிழ்நாட்டிற்கு இயல்பான மழைப்பொழிவு கிடைக்கப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த அக்டோபர் மாதத்திலேயே கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. மேலும் 17 மாவட்டங்களிலும் அதிக மழை பெய்துள்ளது. எனவே, நாம் கவனத்துடன் பணியாற்ற வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம்.

கடந்த 24-9-2021 அன்று, ‘வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள்’ குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் தலைமையில் 11-9-2021 அன்று முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து, பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் சொல்லப்பட்ட கருத்துகளை உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளிலிருந்து வரப்பெறும் முன்னெச்சரிக்கை செய்திகள், சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பொது மக்களுக்கும், மீனவர்களுக்கும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் நன்கு சேவையாற்றக்கூடிய தன்னார்வத் தொண்டு அமைப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும், 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோடு செயல்படவேண்டும். இந்த மையங்களை பொது மக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம். இந்தத் தகவல் அனைத்துப் பொது மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். 100 என்று சொன்னால், அது காவல் துறை. 108 என்று சொன்னால், அது அவசர ஆம்புலன்ஸ் என்று மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது. அதைப்போல, இந்த எண்களும் மக்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்களாக மாற வேண்டும்.

இந்த நேரத்தில் மீனவர்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும், வானிலை முன்னறிவிப்பு குறித்து, நவீனத் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும், மீனவளத் துறை மூலமாகவும் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த மழைக்காலத்தில், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்துகொண்டேயிருக்க மீன்வளத் துறை தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அனைத்து மீனவர்களது உயிரும் நமக்கு முக்கியம் என்பதை கடலோர மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களும், காவல் துறை கண்காணிப்பாளர்களும் நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பருவமழை காலத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நீங்கள் தவறாது பின்பற்ற வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிக்கென தனித்தனியே பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகள், கடலோர மீனவக் குடியிருப்புகள் ஆகிய இடங்களின் நிலைமையை இந்தக் குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தூர்வாரப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், வரத்துக் கால்வாய்கள், நீர்வழிப் பாதைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவசரகாலப் பணிகளை மாவட்டங்களில் மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள செய்தியை பார்த்திருப்பீர்கள். அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள், மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 25ம் தேதியன்று சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று, நேரிடையாகப் பார்வையிட்டது அனைவருக்கும் தெரியும்.

காந்தி மண்டபம் சாலை மற்றும் இதர பகுதிகளில், வடிகால்கள் தூர்வாரக்கூடிய பணியினையும், வண்டல் வடிகட்டும் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியினையும், மழை, வெள்ளநீர் தங்குதடையின்றி செல்லக்கூடிய வகையில் வேளச்சேரி ஏரி மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஆகாயத் தாமரையினை அகற்றும் பணியினையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுகளை அகற்றும் பணியினையும், நாராயணபுரம் ஏரியில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் பணியினையும் நேரிடையாக சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் நீங்கள் அனைவரும் பணிகளை முடுக்கி விட வேண்டும். செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை கடந்த 20 ஆம் தேதியன்று பார்வையிட்டு, உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மழைபெய்து வரும் நிலையில், பெரும்பாலான அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அணைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி, அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அணைப் பாதுகாப்பு, அணைகள், நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவது தொடர்பான விதிமுறைகளைத் தவறாது பின்பற்றி, உபரி நீர்த் திறப்பு குறித்து பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்கி உபரி நீரைத் திறந்து விட வேண்டும்.

பருவமழை காலத்தில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும், தாழ்வாகச் செல்லக்கூடிய மின்கடத்திகளைச் சரிசெய்திடவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்குவதால் பயிர்கள் மூழ்கி சேதமாகும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, வடிகால்களைத் தூர்வார வேண்டும். அறுவடை செய்த நெல்மணிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மழைக் காலங்களில் நோய்கள் அதிகம் உருவாகி, பரவிடக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், மருந்து உபகரணங்கள், பாம்புக் கடிக்கான மாற்று மருந்தும், ஆக்சிஜன் உருளைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் மக்களை மீட்கும்போது, மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும். இதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்துத் துறைகளுடைய ஒருங்கிணைப்புதான், அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அனைத்துப் பாதிப்புகளையும் தடுக்கும் என்பதை அனைவரும் நன்றாக உணர்வீர்கள். ‘இயற்கையை இயைந்து வெல்வோம்!’ என்ற அந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்" என்று பேசினார்.


ஷாருக்கான், ஆர்யன்கான், மோடி அரசு, சீமான், Shah Rukh Khan, Aryan Khan, Modi Government, Seeman
அரசியல்,முதன்மை செய்தி

"ஆர்யன் கானையைப் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, போதை விருந்து நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசுக்கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன?" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானைப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலேயே, அவரைக் குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குறியது. ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடிகள் வரை பேரம் பேசப்பட்டன என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆர்யன் கானையைப் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, போதை விருந்து நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசுக்கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கையென்ன? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. தவிர்க்க இயலா பல்வேறு ஐயங்களும், விடைதெரியா கேள்விகளும் எழும் நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதாலேயே, இவ்வழக்கில் ஆர்யன் கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை.

குஜராத் மாநிலத்தில் அதானி குழுமத்தால் நடத்தப்படும் முந்த்ரா துறைமுகத்தில் 2,988.21 கிலோ எடையும், 21,000 கோடியிலான சந்தை மதிப்பும் கொண்ட போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கானை கைது செய்த வழக்கில் காட்டும் முனைப்பும், தீவிரமும் பாஜக அரசின் அப்பட்டமான அதிகார தலையீட்டையும், அரசியல் இலாப நட்ட கணக்கீடுகளையுமே காட்டுகிறது. முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரத்தில் பின்புலத்திலுள்ள வலைப்பின்னல் குறித்தும், கடத்தல் பெரும் புள்ளிகள் குறித்தும் வாய்திறக்காது, அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளைப் பாய்ச்சாத இந்நாட்டின் ஆட்சியாளர்கள், ஆர்யன் கான் வழக்கில் காட்டும் அதீதக்கவனம் இயல்பானதல்ல.

பழங்குடி மக்களுக்காகப் போராடிய பெருமகன் ஐயா ஸ்டோன் சுவாமி அவர்களைப் பொய்யான வழக்கில் கொடுஞ்சட்டத்தைக் கொண்டு பிணைத்து, அவரைச் சிறைக்குள்ளேயே சாகடித்த இந்நாட்டின் ஆட்சியாளர்கள், தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவும், பழிவாங்கல் போக்குக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்; எவரை வேண்டுமானாலும் கைதுசெய்வார்கள் என்பது வெளிப்படையானது. அந்த வகையில், குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கெதிராகப் போராடியதற்காக உமர் காலித், சர்ச்சில் இமாம், அப்துல் காலித், சைபி, இஷ்ரத் ஜான், மீரான் ஹைதர், குல்பீ ஷா, ஷீபா உர் ரகுமான் போன்றவர்களையும், உத்தரப்பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்துச் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சித்திக் கப்பனையும் இஸ்லாமியர் எனும் ஒற்றைக் காரணத்திற்காகவே, ஊபா சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தி வதைத்து வருவது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினைக் குலைத்து, சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிளந்து பிரிந்து, மத ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல் வெட்கக்கேடானது. பாஜக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்" என்று கூறியுள்ளார்.


ஜெயலலிதா, ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ, உச்சநீதிமன்றம், Jayalalithaa, Arumugasami Commission, Apollo, Supreme Court
தமிழ்நாடு,முதன்மை செய்தி

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி ஆஜராக முடியாது என உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதா சிகிச்சை அறையில் சிசிடிவி அகற்றப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக வாதங்களை அப்போலோ நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தார். அதாவது, “ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருதலைப்பட்சமாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் நிலையில் எங்களது மருத்துவர்களையே மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்றனர்.

விசாரணை விவரங்கள் திட்டமிட்டு ஊடகங்களுக்கு கசியவிடப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி ஊடகங்களில் தொடர்ந்து தவறான ஊகச் செய்திகள் வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் தரம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்த கருத்துகளே போதுமானவை. ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் அப்போலோ மருத்துவமனையின் நற்பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போதாமை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி எப்படி விசாரிக்க முடியும் ?. ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் குழு உதவி இல்லாமல் ஆணையம் கருத்து தெரிவிக்க கூடாது. ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்பதால் மருத்துவர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை. மருத்துவர்கள் குழு அடங்கிய வேறு விசாரணை ஆணையம் முன் ஆஜராக தயாராக உள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு பிரைவசி தேவைப்பட்டதாக கூறி சிசிடிவி கேமராக்கள் அகற்றபட்டன” எனவும் தெரிவித்துள்ளது.


பெட்ரோல், டீசல், சென்னை, எண்ணெய் நிறுவனம், மத்திய அரசு, மோடி அரசு, பாஜக அரசு, Petrol, Diesel, Chennai, Oil Company, Central Government, Modi Government, BJP Government
தமிழ்நாடு,முதன்மை செய்தி

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விலை உயர்த்தப்படாத நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ.104.83க்கும், டீசல் ரூ.100.92க்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


பெகாசஸ், உச்சநீதிமன்றம், Pegasus, Supreme Court
இந்தியா,முதன்மை செய்தி

இந்தியாவின் ரகசியத்தை காப்பது முக்கியம் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு சிறப்பு நிபுணர் குழு அமைக்க கோரிய மனுக்களை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த ரிட் மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 17ம் தேதி உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குறிப்பிட்ட மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியதா அல்லது இல்லையா என்பதை பொது விவாதமாக்க முடியாது, நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விரிவான பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்ய விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழு அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யட்டும் என வாதிட்டார்.

மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட விவகாரத்தில் அனைத்து தகவல்களையும் கோர்ட்டுக்கும், மனுதாரர்களுக்கும் தெரிவிக்கவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மத்திய அரசு குழு அமைக்க அனுமதிக்கக்கூடாது. அமைக்கப்படும் குழு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என வாதிட்டார்.

செயல்பாட்டாளர் ஜெகதீப் சொக்கர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், பெகாசஸ் மென்பொருளை வெளிநாட்டு அமைப்புகள் பயன்படுத்தியிருந்தால் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மத்திய அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யும் எவ்வித தகவலையும் மத்திய அரசு தெரிவிக்க வேண்டியதில்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு சுற்றிவளைத்துப் பேசுவதால் எவ்வித பலனுமில்லை.

இந்த ரிட் மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறோம். இடைக்கால உத்தரவு 2 அல்லது 3 நாட்களுக்குள் பிறப்பிக்கப்படும். அதற்குள் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றும் என்றால் அது குறித்து கோர்ட்டில் முறையிடலாம் என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இன்று காலை வெளியிட்டுள்ளது. அதன்படி 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, “இந்தியாவின் ரகசியத்தை காப்பது முக்கியம். தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தனிமனித உரிமைகளும் முக்கியம். பத்திரிகையாளர் மட்டுமின்றி அனைத்து மக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். சிறப்பு நிபுணர் குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்” என்று தெரிவித்தனர்.

இதன்படி ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ரா பிரிவின் முன்னாள் இயக்குநர் அலோக் ஜோஷி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஒபராய் ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


போலி நகைகள், ஆரணி, கூட்டுறவு வங்கி, Fake jewelery, Arani, Co operative Bank
மாவட்டம்,தமிழ்நாடு,முதன்மை செய்தி

கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இதனையடுத்து, பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

அவ்வாறு விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், 5 சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நகைக்கடனை வசூலிக்கவும், தவணை தொகையை கட்ட தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் 77 போலி நகைகள் மற்றும் தரம் குறைவான சீல் இடப்பட்ட நகைப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நபர்களுக்கு குறைவாக எடை கொண்ட நகைகளுக்கு அதிக எடை என எழுதப்பட்டு கூடுதலாக ரூ.2.39 கோடி நகைக்கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது தக்க நடவடிக்கை மற்றும் விசாரணை மேற்கொள்ள திருவண்ணாமலை இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்க பதிவாளருக்கு பரிந்துரைத்துள்ளார். இதன் அடிப்படையில் வங்கி பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல முறைகேடு தொடர்பான செய்யாறு துணைப்பதிவாளர் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடனில் முறைகேடை தொடர்ந்து தற்போது பொது நகைக்கடன் முறைகேட்டையும் ஆதாரத்துடன் கூட்டுறவுத்துறை கண்டுபிடித்துள்ளது.


சசிகலா, காமராஜ், வைத்திலிங்கம், ஓபிஎஸ், ஈபிஎஸ், sasikala, Kamaraj, Vaithilingam, OPS, EPS
கட்டுரை

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலாவை அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா சிறிது காலமாக அமைத்தி காத்து வந்தார். இந்தநிலையில், அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு துவக்கத்தில் இருந்து மீண்டு தனது அரசியல் பணியை தொடங்கினார் சசிகலா. அதன் தொடர்ச்சியாக வரும் 30ம் தேதி வரை தென் மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

இதனிடையே, சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது. மதுரையில் அவர் கொடுத்த பேட்டி, சசிகலாவின் தலைமையை ஏற்க அவரும், அவரது ஆதரவாளர்களும் தயாராகிவிட்டார்கள் என்பதை காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

இந்தநிலையில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்றுள்ளார். தஞ்சையில் தங்கி இருக்கும் அவரை முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், காமராஜ் ஆகியோர் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதேபோன்று நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்குள்ள அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை சந்தித்து பேசுவார்கள் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதேபோன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சி.டி. பிரபாகரன், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

இதேபோன்று பல நிர்வாகிகள் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவான கருத்துகளை தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பல பேர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வுகளை எல்லாம் கண்டு எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். அவரது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறாராம். இனி அ.தி.மு.க.வில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


தமிழ்நாடு, சென்னை வானிலை ஆய்வு மையம், மழை, Tamil Nadu, Chennai Meteorological Center, Rain
திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி,தமிழ்நாடு,முதன்மை செய்தி

வங்க கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், இதர தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (அக்.28) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 29, 30 தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பெட்ரோல், டீசல், சென்னை, Petrol, Diesel, Chennai
தமிழ்நாடு,வணிகம்,முதன்மை செய்தி

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும் மற்றும் டீசல் விலை 33 பைசா உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும் மற்றும் டீசல் விலை 33 பைசா உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் மற்றும் ரஷ்யாவுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப சிங் பூரி கூறியுள்ளார்.


மும்பை ஐகோர்ட், நீட், உச்சநீதிமன்றம், Supreme Court,Mumbai HighCourt, Neet
இந்தியா,முதன்மை செய்தி

நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்ற இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடந்த நீட் நுழைவுத்தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு தொடர்பாக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே மராட்டிய மாநிலத்தில் நீட் தேர்வு நடைபெற்ற மையம் ஒன்றில், இரண்டு மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடை தாள் (OMR sheet) மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கை கடந்த அக்டோபர் 20ம் தேதி விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, அவர்களுக்கும் சேர்த்து தான், நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த சூழலில் இந்த அறிவிப்பால், நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பியூஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை பாதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் என்டிஏ (NTA) தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவை வெளியிட வேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த 2 மாணவர்களின் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு அளித்த உறுதியை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இல்லம் தேதி கல்வித் திட்டம், அன்பில் மகேஷ், தமிழக அரசு, Anbil Mahesh, Tamil Nadu Government
தமிழ்நாடு,முதன்மை செய்தி

"இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவோம்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மூத்த தலைவர்களும், அனுபவம் வாய்ந்தவர்களும் பல கருத்துகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் சுத்தம் சுகாதாரம் என்ற இணையவழி நிகழ்வை தொடங்கி வைத்த பின்னர் செய்தியர்களிடம் பேசிய அவர், முற்றிலும் மாநில அரசின் நிதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது. எச்சரிக்கை உணர்வுடன் தான் திட்டத்துக்கான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதுவரை 80,000 பேர் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளனர். அதில் 68,000 பேர் பெண்கள். தன்னார்வலர்கள் தேர்வில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், அதிகம் படித்தவர்கள் போன்ற பல நிபந்தனைகளின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறோம். சில கட்சித் தலைவர்கள் கூறியுள்ள எச்சரிக்கை உணர்வுடன் தான் இத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இடைநிற்றலை குறைப்பதற்கான வழிவகையாக இல்லம் தேடி கல்வி திட்டம் அமையும்" என்று கூறினார்.


ஓபிஎஸ், சசிகலா, அதிமுக, செல்லூர் ராஜு, ஜெயக்குமார், OPS, Sasikala, ADMK, Sellur Raju, Jayakumar
மதுரை,சென்னை,அரசியல்,முதன்மை செய்தி

சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினார் செல்லூர் ராஜூ. அதே நேரத்தில், அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசும் போது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவில் எதிர்ப்பும், ஆதரவு நிலவி வருகிறது.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, 'சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தைதான் ஓ.பன்னீர் செல்வம் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது' என்று கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். "சசிகலாவை ஆதரிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. அது ஏற்கெனவே எடுத்த முடிவு என்றும் அவர் கூறினார். டி.டி.வி. தினகரன் இல்ல திருமணத்துக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அனைத்தையும் கட்சி கவனித்துக் கொள்ளும் என்று கூறியுள்ளார்.


ரிசர்வ் வங்கி ஆளுநர், சக்திகாந்த தாஸ், இந்திய ரிசர்வ் வங்கி, Reserve Bank Governor, Shaktikanta Das, Reserve Bank of India
இந்தியா,முதன்மை செய்தி

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2018ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சக்தி காந்த தாஸ். ஒன்றிய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் முன்னாள் செயலாளரான இவர், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்தி காந்த தாஸ் 1980ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆக தேர்வானவர். தமிழக கேடர் ஆபீஸராகப் பணியாற்றியவர். மத்திய அரசுப் பணிகளுக்கு 2008ம் ஆண்டு சென்ற இவர், அதற்கு முன்பு தமிழக அரசின் வருவாய்த்துறை ஆணையர், தொழில்துறைச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் டிசம்பர் 10ம் தேதியுடன் முடிவிருந்த நிலையில் ஒன்றிய அரசு பதவிகாலத்தை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.


ஓபிஎஸ், சசிகலா, ஈபிஎஸ், பசும்பொன், முத்துராமலிங்க தேவர், OPS, Sasikala, EPS, Blonde, Muthuramalinga Thevar
மாவட்டம்,ராமநாதபுரம்,கட்டுரை

சசிகலா விவகாரம் தொடர்பாக, முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதை, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராமநாதபுரம் பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, இன்று மதுரை செல்கிறார் சசிகலா. கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின், மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து பசும்பொன் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

ஆண்டுதோறும், பசும்பொன் தேவர் நினைவிடத்திலும் அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். 'சூரியனை பார்த்து குரைக்கிறது' என, சசிகலாவை பழனிசாமி விமர்சித்த விவகாரம், தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இவைகள் முக்குலத்தோர் சமூகத்தினரிடையே கடும் அதிருப்பதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், பசும்பொன் நினைவு இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தால், அவர் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என்றும் இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் பழனிசாமி வருகைக்கு, போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு மத்தியில் நடக்கும் நிகழ்ச்சியாக இருப்பதால் இதில் அ.தி.மு.க.வில் உள்ள சீனியார்கள் யார்? யார்? இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதை வைத்துதான் அ.தி.மு.க.வில் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகமா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமா? என்பது தெரிய வரும் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சசிகலாவும் நாளை பசும்பொன் செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேர்வல் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் ஆதரவாளர்கள் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே நாளில் பசும்பொன் செல்வதால் இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் பசும்பொன் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள். இதேபோன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள். இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ரஜினிகாந்த், காவேரி மருத்துவமனை, லதா ரஜினிகாந்த், Rajinikanth, Kaveri Hospital, Lata Rajinikanth
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதே நேரத்தில், ரஜினிக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து பின்னர் சென்னை திரும்பினார். சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அங்கு சில நாட்கள் அவர் தங்கி இருந்துவிட்டு சென்னை வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சி ரஜினிகாந்துக்காக நேற்று சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தை குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் சென்று பார்த்தார்.

அவர் குடும்பத்தினருடன் சென்றிருந்த படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் உடல்நிலை குறித்து திரையுலகினரும், ரசிகர்களும் விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் கூறும்போது, ‘ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இது வழக்கமான சாதாரண மருத்துவ பரிசோதனை தான். விரைவில் வீடு திரும்புவார்' என்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றனர்.

இதனிடையே, ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உறவினர் ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி மகேந்திரன், ரஜினியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது. ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார். நிச்சயம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும்போது வீட்டில் இருப்பார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து எனக்கு தெரியாது. தீபாவளிக்கு படம் வெளியாகும் போதும் ரஜினியும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து இருப்பார். உறவினர் என்ற முறையில் அவரை பார்த்து நலம் விசாரிக்க வந்தேன்" என்று கூறினார்.

ரஜினியின் உடல் நலம் பற்றி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தை டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தனுஷ், வேலையில்லா பட்டதாரி, சென்னை உயர்நீதிமன்றம், Dhanush, Velaiyilla Pattathari, Chennai High Court
சினிமா,முதன்மை செய்தி

நடிகர் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் தயாரித்து நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது திரையில் இடம்பெறவேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால் பட தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு புகையிலை கட்டுபாட்டுக்கான மக்களமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே இதே விவகாரம் தொடர்பாக மனுதாரர் தொடர்ந்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு மூலம் படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ், இயக்குநர் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியும், மேற்கொண்டு எந்த தவறும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக பட நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, புகையிலை மிக மோசமான சுகாதார பாதிப்பை தரும் பொருள். புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புக்கு ரூ.13,500 கோடி செலவிடப்படுகிறது என தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.


உத்தரபிரதேசம், மாணவன், பள்ளி முதல்வர், Uttar Pradesh, Student, School Principal
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

சாப்பிடும் போது குறும்புத்தனம் செய்ததற்காக தனியார் பள்ளி முதல்வர் ஒருவர், இரண்டாம் வகுப்பு மாணவனை பள்ளிக் கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கவிட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இச்சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், மிர்ஸாபூர் மாவட்டம், அஹ்ரௌரா நகரில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்தது. இதுகுறித்து அறிய நேர்ந்த மாவட்டக் குற்றவியல் நீதிபதி, உடனடியாக அதுபற்றி விசாரிக்கும்படி அடிப்படைக் கல்வி அதிகாரிக்கு ஆணை பிறப்பித்தார். அதனுடன், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் மீது புகார் பதிவுசெய்யவும் அவர் உத்தரவிட்டார்.

சோனு யாதவ் என்ற அந்த மாணவன் சாப்பிடும் போது குறும்புத்தனம் செய்ததால், பள்ளி முதல்வர் மனோஜ் விஸ்வகர்மா கோபமடைந்தார். இதனையடுத்து, ஆத்திரத்தில் சோனுவின் ஒரு காலைப் பிடித்து, இரண்டாம் தளத்தில் இருந்து அவனைத் தலைகீழாகப் பிடித்துத் தொங்கவிட்டார். மற்ற மாணவர்களின் முன்னிலையில் அவனுக்குப் பாடம் கற்பிப்பதற்காக அவர் அப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அச்சத்தில் அலறி, இனிமேல் செய்யமாட்டேன் என்று சோனு மன்னிப்பு கேட்டபிறகே, அவனை மேலே தூக்கினார் விஸ்வகர்மா. இச்சம்பவம் தொடர்பான படம் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தீபாவளி, தீபாவளி பட்டாசு, தமிழக சுகாதாரத்துறை, Diwali, Diwali crackers, Tamil Nadu Health Department
தமிழ்நாடு,முதன்மை செய்தி

வருகின்ற நவம்பர் 4ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை மாநில பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பட்டாசுகளை திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகில் தண்ணீர் அல்லது மணலை ஒரு வாளியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* ஒரு மூடிய கொள்கலனில் பட்டாசுகளை சேமித்து, சுற்றியுள்ள எந்த அழற்சி அல்லது எரியக்கூடிய பொருட்களிலிருந்தும் அவற்றை விலக்கி வைக்கவும்.

* எளிதில் தீப்பிடிக்கக்கூடிய நீண்ட நைலான் ஆடைகளை அணிவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக பொருத்தப்பட்ட பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

* குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது.

* சுவாச பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.

* பட்டாசுகளை வெடிக்கும்போது, ஒரு கை தூரத்தில் நிற்கவும்.

* வாளி தண்ணீரில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளை அப்புறப்படுத்துங்கள்.

* பட்டாசு கொளுத்தும் போது காலில் செருப்பு அணியுங்கள்.

* பட்டாசுகளைக் கையாண்ட பிறகு ஒவ்வொரு முறையும் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவவும். கையில் பட்டாசுகளை கொளுத்த வேண்டாம்.

* பட்டாசுகளை மெழுகுவர்த்திகள் மற்றும் தீபங்களை எரிக்கும் இடத்தில் விடாதீர்கள்.

* மின் கம்பங்கள் மற்றும் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

* முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.

* பட்டாசுகளை வெடிக்க திறந்த நெருப்பு (தீப்பெட்டிகள் அல்லது லைட்டர்கள்) பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

* சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது.


கர்நாடகா, நடிகர் புனித் ராஜ்குமார், பிரதமர் மோடி, ஸ்டாலின், Karnataka, Actor Puneeth Rajkumar, Prime Minister Modi, MKStalin
சினிமா,முதன்மை செய்தி

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது, அனைவரிடத்திலும் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமார் என்ற திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பிரித்துவிட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயதிலேயே புனித் ராஜ்குமார் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்; அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் என்று எடியூரப்பா குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் சகாப்தமான ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார், எனது குடும்பத்துடன் நல்லுறவு கொண்டவர். புனித் ராஜ்குமாரின் இழப்பு, தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

கனிமொழி எம்.பி.: மக்களின் மனம் வென்ற கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு பெரும் இழப்பு என்று கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

புனித் ராஜ்குமார் மறைவுக்கு சிரஞ்சீவி, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரித்வி ராஜ், ஹன்சிகா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நஸ்ரியா, சோனு சூட், ஆர்யா, விஷால், ராதிகா சரத்குமார், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர். தமன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.கே.சுரேஷ், நந்திதா ஸ்வேதா, பார்வதி திருவோத்து, கார்த்திக் ராஜு ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் மகேஷ்பாபு, நிவின் பாலி, ஸ்ராதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிசந்திரன், விஷ்ணு விஷால், மனோபாலா, நிக்கி கலராணியும் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: ``அன்புத் தம்பி புனித் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து சரத்குமார், போனி கபூர், மஞ்சிமா மோகன், சந்தீப் கிஷான், விக்ரம் பிரபு, நாசர், மம்முட்டி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர். துல்கர் சல்மான், ரகுல் பிரீத் சிங், ஷ்ரேயா கோஷல், சாந்தினி, கவுதமி, வைபவ், குஷ்பு, பார்வதி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ராம் சரண், அருண் விஜய், ஈஷா ரெபா, அனுஷ்கா, ஜூனியர் என்.டி.ஆர்., சுனைனா, ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களும் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து தங்களது இரங்கலை பதிவு செய்திருக்கின்றனர்.


முத்துராமலிங்கத் தேவர், முதல்வர் ஸ்டாலின், Muthuramalingam Thevar, Chief Minister Stalin
ராமநாதபுரம்,தமிழ்நாடு,முதன்மை செய்தி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாளையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 30ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இதன் தொடர்ச்சியாக, தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்து மரியாதை செலுத்தினர்.


கொரோனா, திரையரங்குகள், மதுரை, உயர்நீதிமன்றம், Corona, Theaters, Madurai, High Court
மதுரை,சினிமா,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நவம்பர் 3,4ம் தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிடக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தற்போது தொடர்ச்சியாக திருவிழா காலமாக இருப்பதால், கொரோனா நோய் தடுப்பு வழி முறைகளை, பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், தமிழகம் இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை. இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது கொரோனா நோய் தொற்று பரவலை அதிகரிக்கவே செய்யும்.

அன்மையில், கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்கங்கள் 100% இருக்கைகளுடன் இயங்கும் போது பார்வையாளர்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே இருக்கும்.

தற்போது தீபாவளி பண்டிக்கையை ஒட்டி எனிமி, வா டீல் ஆகிய உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளன. இது கொரோன பரவலுக்கு காரணமாக அமையும். எனவே, சினிமா திரையரங்குகள், 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், நவம்பர் 3, 4 தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


ஷாருக்கான், ஆர்யன்கான், போதை பொருள் வழக்கு, ஜாமீன்,  Shah Rukh Khan, Aryan Khan, drug case, bail
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

மும்பையில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கைதான ஆர்யன் கான் 28 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்து, தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சிறையிருந்து தற்போது வெளியே வந்துள்ளார்.

மும்பையில் சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை விருந்து நடைபெறுவதாக தகவலறிந்த மும்பை போதை பொருள் தடுப்பு இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் அதே கப்பலில் பயணிகள் போல் சென்றுள்ளனர். கப்பல் நடுக்கடலை நெருங்கியபோது பார்ட்டி தொடங்கியுள்ளது. அதில் பயணித்தவர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதையடுத்து போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்டவர்களில் பல பேர் மும்பை திரையுலகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அதில், குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கானும் ஒருவர். பின்னர் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் ஆர்யன் கானை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 28 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் ஜாமீன் கிடைத்த நிலையில் ஆர்யன் கான் தற்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தனது பாதுகாவலர்களுடன் மகனை ஷாருக்கான் அழைத்துச் சென்றார்.


சென்னை மாநகராட்சி, இறைச்சி கடை, சென்னை, மகாவீர் ஜெயந்தி, Chennai Corporation, Meat Shop, Chennai, Mahaveer Jayanti
சென்னை,தமிழ்நாடு,முதன்மை செய்தி

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற 04.11.2021 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதே போல் ஆடு, மாடு, கோழி இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக 04.11.2021 அன்று முழுவதும் அனைத்து, இறைச்சிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனைத்து மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர். துப்புரவு அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்க மண்டல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெர