முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு...

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

சென்னை, தருமபுரி, சேலம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானத்தை விட கூடுதலாக 11 கோடியே 32 லட்சம் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் கடந்த ஆண்டு சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது கே.பி.அன்பழகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுவரை சோதனை நடைபெற்ற முன்னாள் அமச்சர்களின் விவரங்கள்...

* ஜூலை மாதத்தில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. அந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

* ஆகஸ்ட் மாதத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சோந்தமான இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. அதில் ரூ. 811 கோடி மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்திருப்பது அம்பலமானது.

* செப்டம்பர் மாதத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 36 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. அதில் ரூ.34 லட்ச்ம் ரொக்கப் பணம், $1.84 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், 5 கிலோ தங்க நகைகள், ரோல்ஸ் ராய்ஸ் உள்பட 9 சொகுசு கார்கள் சிக்கின.

* அக்டோபரில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. ரூ. 23.82 லட்சம் ரொக்க பணம், 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

* டிசம்பர் மாத்ததில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணிக்கு சொந்தமான 68 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. 100-கும் மேற்பட்ட லாரி கணக்கு உள்ளிட்டவை சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பதிவு: January 20, 2022
ஒமிக்ரான் பாதிப்பு 34 ஆக உயர்ந்தது!- 3வது இடத்தில் தமிழ்நாடு

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.

உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் கடந்த மாதம் 24ம் தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது.

இந்தியாவிலும் கடந்த 2ம் தேதி நுழைந்த இந்த வைரஸ் 21 நாளில் 269 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரஸைவிட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.

இந்தநிலையில், 41 பேரின் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் வெளியானதில் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 43 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வர வேண்டி உள்ளது. கொரோனா உறுதியான 114 பேரில் 57 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்ததால் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்ட நிலையில் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

சென்னையில் 26 பேரும், மதுரையில் 4 பேரும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வர வேண்டி உள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் சிகிச்சையில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

பதிவு: December 23, 2021
சேலம் மாவட்டத்தில் 38.53 கோடியில் 83 திட்டம்!- முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்!

சேலம் மாவட்டத்தில் 38 கோடியே, 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலம் மாவட்டம் தலைவாசல், வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டிணம், வீரபாண்டி, ஏற்காடு மற்றும் கொங்கணாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள், ஊராட்சிமன்ற அலுவலகங்கள், சமுதாய சுகாதார வளாகக் கட்டடங்கள், பள்ளிக் கூடுதல் கட்டடங்கள், நியாய விலைக்கடை கட்டடங்கள், சிறு பாலம் மற்றும் தடுப்பணைகள், என மொத்தம் ரூ.15.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்.

* ஓமலூரில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம்.
* மேட்டூரில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டடம்.
* சந்தியூரில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குநர்அலுவலகக் கட்டடம்.
* தலைவாசல் வட்டம், மும்முடி கிராமத்தில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்.

* நாழிக்கல்பட்டி, கரியகோவில், கடம்பூர், வெள்ளையூர், உமையாள்புரம் ஆகிய இடங்களில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடங்கள்.
* சேலம் மேற்கு வருவாய் வட்டாட்சியருக்கு ரூ.28.81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புக் கட்டடம்.
* எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.3.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 படுக்கை வசதிகளுடன் கூடிய பெண்கள் கவனிப்பு பிரிவு, 24 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆண்கள் பிரிவு, 4 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ஆகிய பிரிவுகள் கொண்ட கட்டடம்.
* ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆத்தூர் துணை இயக்குநர், சுகாதார பணிகள் புதிய அலுவலகக் கட்டடம்.
* எடப்பாடி வட்டம், மேட்டுப்பாளையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையக் கட்டடம்.

* நெடுங்குளம் ஊராட்சி, கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புக் கட்டடம்.
* நெடுங்குளம் ஊராட்சி, கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.71.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர்/பணியாளர் குடியிருப்புக் கட்டடம்.
* நெடுங்குளம் ஊராட்சி, கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையக் குடியிருப்புகளுக்கு ரூ.31.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுசுவர் மற்றும் வாகன நிறுத்தக்கூடம்.
* பகடுப்பட்டு அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் ரூ.94.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம் மற்றும் சமையலறை கட்டடம். சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எடை மேடை.
* செட்டியப்பனூர், கொல்லத்தெரு, மஞ்சையன்காடு, காரைக்காடு, வால்கரடு, மலமானூர், வெங்கடாசலம் காலனி மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் ரூ.60.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடைகள்.
* ஒருங்கிணைந்த சேலம் (நெ) நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் அலுவலகத்திற்கு ரூ.95.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டம் மற்றும் கோட்ட அலுவலகக் கட்டடம்.

என மொத்தம், 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பதிவு: December 11, 2021
பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை!- பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கி உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5ம் தேதி நிறைவடைந்தது. இதில் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

ரியோவில் நடந்த 2016 பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2017 ஜனவரி 25 ஆம் தேதி, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது. இந்திய அரசு இவருக்கு ஆகஸ்டு, 2020-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில், பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் காகித ஆலையின் வர்த்தக பிரிவில் துணைமேலாளராக தமிழக அரசு பணி வழங்கி உள்ளது. அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாரியப்பன் தங்கவேல் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: November 03, 2021
ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்!- கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு உள்பட 27 இடங்களில் ரெய்டு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் அதிமுகவின் ஜெ.பேரவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் இளங்கோவன். இந்த நிலையில், சேலத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் உள்ள 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் இளங்கோவன். திருச்சியில் முசிறியில் இளங்கோவனுக்கு சொந்தமான பாலிடெக்னிக், கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலத்தில் சேலம் மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குபேந்திரன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணை தலைவராகவும் குபேந்திரன் உள்ளார்.

சேலம் இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 -2020 வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில், ரூ.3.78 கோடி சொத்துகளை குவித்ததாக இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: October 22, 2021
`5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும்!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

17ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும். இன்று முதல் 16ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் , மன்னார் வளைகுடா பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

பதிவு: October 13, 2021
`நாளை உருவாகிறது புயல்; தமிழகத்தில் 5 நாட்களுக்கு செம மழை!'- வானிலை மையம் அலர்ட்

"அந்தமான் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும் இதனால் தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி , கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும் ஈரோடு தேனி திண்டுக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இன்று முதல் வருகின்ற 16ம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல், குமரி கடல், மன்னார் வளைகுடாப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட இடங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: October 13, 2021
ஒன்றரை ஆண்டுகளாக புற்றுநோயால் அவதி!- 14 வயது மகனை விஷ ஊசி போட்டுக் கொன்ற தந்தை

புற்றுநோயால் அவதிப்பட்ட 14 வயது மகனை விஷ ஊசி போட்டு கொன்றதாக எழுந்த புகாரின் பேரில் சிறுவனின் தந்தை, ஊசி போட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கட்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் வண்ண தமிழ், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளான். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த போது புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதன்பின் சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சையை தொடர்ந்துள்ளனர். கடந்த சில தினங்களாக சரிவர சாப்பிடாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு படுக்கையிலேயே இயற்கை உபாதைகள் கழிக்கும் நிலை ஏற்பட்டது.

அதனால் கவலையடைந்த பெரியசாமி, உள்ளூர் மருத்துவ பணியாளர் ஒருவரை அழைத்து வந்து ஊசி போட்டதாக தெரிகிறது. மறுநாள் காலையில் பார்த்த போது சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்தான். இதனையறிந்த அப்பகுதி மக்கள், சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக பேச தொடங்கினர்.

அது பற்றிய தகவல் காட்டுத்தீயாய் பரவியதால் கிராம நிர்வாக அலுவலர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுவனின் தந்தை பெரியசாமி, விஷ ஊசி போட்ட மருத்துவ பணியாளரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: October 04, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்