அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை, தருமபுரி, சேலம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்தை விட கூடுதலாக 11 கோடியே 32 லட்சம் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் கடந்த ஆண்டு சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது கே.பி.அன்பழகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை சோதனை நடைபெற்ற முன்னாள் அமச்சர்களின் விவரங்கள்...
* ஜூலை மாதத்தில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. அந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
* ஆகஸ்ட் மாதத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சோந்தமான இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. அதில் ரூ. 811 கோடி மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்திருப்பது அம்பலமானது.
* செப்டம்பர் மாதத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 36 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. அதில் ரூ.34 லட்ச்ம் ரொக்கப் பணம், $1.84 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், 5 கிலோ தங்க நகைகள், ரோல்ஸ் ராய்ஸ் உள்பட 9 சொகுசு கார்கள் சிக்கின.
* அக்டோபரில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. ரூ. 23.82 லட்சம் ரொக்க பணம், 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
* டிசம்பர் மாத்ததில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணிக்கு சொந்தமான 68 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. 100-கும் மேற்பட்ட லாரி கணக்கு உள்ளிட்டவை சிக்கியது குறிப்பிடத்தக்கது.