பெரம்பலூர்
கோயில் தேரை கொளுத்த வந்த ஆசாமியை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்!

கோயில் தேரை கொளுத்த வந்த ஆசாமியை கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சார்ந்த காதர் ஷான் என்பவரின் மகன் முஹம்மது ஷான் என்பவர் இந்து கோயிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் பூட்டை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்ற போது அப்பகுதி மக்கள் அந்த ஆசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது கடந்த சில வருடங்களாக இந்த தேர்கள் பூட்டி கிடைப்பதால் இதன் உள்ளே என்ன இருக்கு என்றும் கோர்ட் ஆர்டர் கொடுத்தும் என் தேர் ஓடவில்லை என்றும் அதனால் தேரை தீயிட்டு கொழுத்த வந்தேன் என்றும் ஒப்புக்கொண்டார்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் கோயிலில் உள்ளே திடீரென தீவிபத்து ஏற்பட்டு சாமி பொருட்கள் வைக்கும் மண்டபம் தீப்பற்றி எரிந்தன எப்படி தீ பற்றி எரிந்து என்று பொதுமக்கள் நினைத்திருந்த நிலையில் இன்று இச்சம்பவம் நடந்த போது முகமது ஷான் என்ற ஆசாமி நான்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த மண்டபத்தை கொழுத்தினேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அந்த ஆசாமியை பொதுமக்கள் பிடித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் சம்பந்தமாக விகளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன என்றும் இவருக்கு பின்புலமாக இருப்பது யார் என்றும் விசாரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. இந்து, முஸ்லிம் இடையே வி.களத்தூர் கிராமத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படும் நிலையில் இச்சம்பவம் இன்று நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: September 23, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்