ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு!

மாரடைப்பால் காலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

சுழற்பந்துவீச்சில் ஜாம்பவான் எனப் போற்றப்படுபவர் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே. பேட்ஸ்மேனின் கவனத்தை நொடிப்பொழுதில் பதம்பார்த்து விக்கெட்டை வீழ்த்தும் இவரது அபார பந்துவீச்சால் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றவர். தனது சுழற்பந்து திறனால் பல்வேறு வெற்றிகளை ஆஸ்திரேலியாவுக்குப் பெற்றுத் தந்த வார்னே, உலகம் முழுக்க பல்வேறு ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தான், விடுமுறைக்காக தாய்லாந்து சென்றிருந்த வார்னே, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 52. தூக்கத்தில் பேச்சு மூச்சற்றுக்கிடந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்ததாக உறுதித் தகவல் அளித்துள்ளனர். இச்செய்தி, உலகெங்கிலுமுள்ள அவரது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கலங்கடித்துள்ளது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுன் நல்லடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்னே மரணிப்பதற்கு சிலமணிநேரங்கள் முன்பு காலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ராட் மார்ஷ்-க்கு இரங்கல் தெரிவித்த அவரது ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி காண்போரை கலங்கடித்துவருகிறது.

அப்பதிவில் அவர், “ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஓர் சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாது, பல இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் இருந்தவர். ராட் கிரிக்கெட்டை மிகவும் விரும்புபவர். எனது அன்புகளை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உரித்தாக்குகிறேன். ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டிருந்தார்.

தனது மரணத்திற்கு சுமார் 12 மணிநேரத்திற்கு முன் இப்பதிவை இடும்போது இருந்த அவர், 12 மணிநேரத்திற்குப்பின் உயிரோடு இல்லாதிருப்பதை எண்ணி அவரது ரசிகர்கள் கண்ணீர் வடித்துவருகின்றனர்.

பதிவு: March 05, 2022
ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டி! அகமதாபாத், லக்னோ அணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் வெளியீடு!

ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டியில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கான வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வழக்கமான 8 அணிகளுடன் சேர்த்து புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

ஐபிஎல்லின் பிற 8 அணிகளுக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியல் முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டதை அடுத்து, வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் ஏனைய விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் ஏலம் நடைபெறவிருக்கிறது.

இதையடுத்து, புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் மூன்று வீரர்கள் குறித்த தகவலை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கே.எல் ராகுல், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட விளையாட்டு வீரர் என்ற பெயரைப் பெறுகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனில் பஞ்சாப் அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தனார்.

மேலும், இவருடன் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரூ.9.2 கோடிக்கும், இந்தியாவின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ரூ.4 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் செய்த சுப்மன் கில் ரூ.8 கோடிக்கும், ஸ்பின்னர் ரஷீத் கான் ரூ.15 கோடிக்கும் அகமதாபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு: January 22, 2022
செஞ்சூரியன் டெஸ்ட்!- சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி `கெத்து' காட்டியது இந்திய படை!

செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கெத்து காட்டியது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 105.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை குவித்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 62.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென் ஆப்பிரிகாவை விட 304 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வந்தது. இந்நிலையில், நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணியின் கேப்டன் எல்கர் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. வெற்றிபெற மேலும் 211 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி இன்று களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய பவுமா இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார். சிறப்பாக விளையாடிய டீன் எல்கர் 77 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு களமிறங்கிய டி காக் 21 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த முல்டர் 1 ரன்களில் நடையை கட்ட தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்களை இழந்தது. உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணியின் பவுமா 34 ரன்களுடனும் யான்சென் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு முகமது சமி பந்துவீச்சில் யான்சென் 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரபாடா , இங்கிடி அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ரன் எடுக்காமல் அவுட்டாகினர். இதனால் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி வீழ்த்தி கெத்து காட்டியது.

பதிவு: December 30, 2021
இங்கிலாந்து மோசமான தோல்வி!- ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

மெல்போனில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 68 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 267 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டார்க் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 4, ராபின்சன், வுட் தலா 2, ஸ்டோக்ஸ், லீச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 82 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றும் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் மளமளவென சரிந்தன. இறுதியில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 68 ரன்னுக்கு சுருண்டது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இரட்டை இலக்கை தொட்டனர், மற்றவர்கள் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றிருந்ததால் ஆஷஸ் தொடரில் 3-0 என கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் 4 ஓவர் வீசி வெறும் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதுடன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டு வீழ்த்தினார்.

பதிவு: December 28, 2021
பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வீழ்ந்தது இங்கிலாந்து!- ஆஷஸ் போட்டியை வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா

பிரின்ஸ்பேன் மைதானத்தில் நடந்த ஆஷஸ் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பிறகு மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.


பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 104.3 ஓவர்களில் 425 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பிறகு இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹமீத் 27 ரன்களிலும் ரோரி பர்ன்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலன் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

டேவிட் மலன் 82 ரன்களும், கேப்டன் ரூட் 89 ரன்களும் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 103 ஓவர்களில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அப்போது இங்கிலாந்து அணி 19 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 7 ரன்னுடனும், மார்னஸ் லபுஷேன் ரன் ஏதும் எதுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

பதிவு: December 11, 2021
அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்!- இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு

 

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தற்போது நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகள் விளையாடி வரும் இந்திய அணி வரும் 17-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் விளையாட இருந்தது.

இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் போட்டிகள் எப்போது நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

பதிவு: December 04, 2021
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்!- இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரஹானே நீக்கம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இடது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயத்தின் தன்மை குறித்து பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனைக்கு பின், அவரது முன்கையில் வீக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு ஓய்வளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் பீல்டிங் செய்யும்போது ரஹானேவுக்கு சிறிய தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ரஹானே முழுமையாக குணமடையாததால், மும்பையில் நடக்கும் 2வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். ரஹானே உடல்நிலை முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருவதாக செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

பதிவு: December 03, 2021
ஆஸ்திரேலியா வரலாற்றில் இதுவே முதன் முறை!- பந்துவீச்சாளர் டெஸ்ட் கேப்டனாக நியமனம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தை துணை கேப்டனாக நியமித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியபோது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அப்போதைய டெஸ்ட் கேப்டன் ஸ்மித் பதவி விலகினார். புதிய டெஸ்ட் கேப்டனாக, டிம் பெய்ன் கடந்த 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பெண் ஊழியர் ஒருவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகார் பரபரப்பை கிளப்பியது. இந்த விவகாரம் வெளியில் வந்ததை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் டிம் பெய்ன். இதையடுத்து புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருடைய பெயரை சிபாரிசு செய்துவந்தனர்.

வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், முன்னாள் கேப்டன் ஸ்மித் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இந்நிலையில் பேட் கம்மின்ஸ் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 47வது கேப்டன் ஆவார். ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. பரபரப்பான இந்த தொடரில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்நிலையில் பேட் கம்மின்ஸ் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர், ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை. ‘பெரிய ஆஷஸ் தொடருக்கு முன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதில் பெருமை கொள்கிறேன்’ என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

பதிவு: November 26, 2021
கம்பீரை மிரட்டும் ஐஎஸ் தீவிரவாதிகள்!- வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரை அடுத்து கவுதம் கம்பீர் எம்.பி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அரசியலில் களமிறங்கினார். பாஜக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர், கிழக்கு டெல்லி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்போது டிவி நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.


இந்நிலையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ’ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக டெல்லி போலீசில் நேற்றிரவு புகார் செய்துள்ளார். கவுதம் கம்பீர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில், கம்பீருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் இமெயில் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய டெல்லி இணை போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்வேதா சவுகான் தெரிவித்தார்.

பதிவு: November 24, 2021
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பன்றி, மாட்டிறைச்சி சாப்பிட தடையா?- பிசிசிஐ சொல்வது என்ன?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பன்னி, மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாது என்று தகவல் பரவியலை அடுத்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசைவ உணவுகளில் ஹலால் உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், மறுபுறம் எதிரணியான நியூசிலாந்து அணி நிர்வாகம், தங்களது உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி கட்டாயம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலின் படி, கோழி இறைச்சியும் ஆட்டு இறைச்சியும் மட்டுமே அசைவ உணவுகளாக உள்ளன. பிசிசிஐயின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, உணவு குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் விளக்கம் அளித்துள்ளார். "இது தவறான செய்தி. எந்த உணவை சாப்பிட வேண்டும், எந்த உணவை சாப்பிடக்கூடாது என்பது குறித்து வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

பதிவு: November 24, 2021
`அந்த பெண்ணுக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டேன்!'‍- பாலியல் புகாரால் கேப்டன் பதவியை துறந்த டிம் பெய்ன்

"நான் அனுப்பிய அந்த தனிப்பட்ட குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட இருப்பதாக சமீபத்தில் அறிந்தேன். என் மனைவி, குடும்பம் மற்றும் அந்தப் பெண்ணுக்கு நான் காயத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன்" என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் ராஜினாமா செய்த டிம் பெய்ன் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியபோது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அப்போதைய டெஸ்ட் கேப்டன் ஸ்மித் பதவி விலகினார். இதனால் புதிய டெஸ்ட் கேப்டனாக, டிம் பெய்ன் கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பெய்ன், கேப்டனாக நியமிக்கப்பட்ட போதே, பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொடர்பான, குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், டிம் பெய்ன் தனது பதவியை இப்போது ராஜினாமா செய்துள்ளார்.

"இது கடினமான முடிவுதான். ஆனால் எனக்கும் என் குடும்பத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் இது சரியான முடிவு. நான்கு வருடங்களுக்கு முன், அப்போதைய சக பெண் ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அது தனிப்பட்ட பரிமாற்றம். விசாரணைக்கு வந்தது. அதில் வெளிப்படையாக பங்கேற்றேன். ஆனால், அப்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நடத்தை விதிகள் மீறப்படவில்லை என்று தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தேன். இப்போதும் தெரிவிக்கிறேன். என் மனைவி, குடும்பம் மற்றும் அந்தப் பெண்ணுக்கு நான் காயத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன்.

நான் அனுப்பிய அந்த தனிப்பட்ட குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட இருப்பதாக சமீபத்தில் அறிந்தேன். இதனால், கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுவது சரியான முடிவு என்று நம்புகிறேன். ஆஷஸ் தொடருக்கு முன் அணிக்கு இடையூறாக மாறுவதை நான் விரும்பவில்லை. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக என் பங்களிப்பை நேசித்தேன். அணியை வழிநடத்தியதை என் விளையாட்டு வாழ்க்கையின் பாக்கியமாக கருதுகிறேன். சக வீரர்களின் ஆதரவுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’ என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

பதிவு: November 19, 2021
ரூ.5 கோடி மதிப்புள்ள கடிகாரங்கள் பறிமுதலா?- ஹர்திக் பாண்டியா விளக்கம்

துபாயில் இருந்து திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள் பறிமுதல் செய்யபட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியினர் இந்தியாவில் இருந்து கடந்த 14ம் தேதி தாயகம் திரும்பினர். துபாயில் இருந்து திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்டியாவிடம் இந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இதனை மறுத்துள்ள ஹர்திக் பாண்டியா விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்., அந்த அறிக்கையில், ”ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரே ஒரு கைக்கடிகாரம் மட்டுமே என்னிடம் இருந்தது. மும்பை விமான நிலையத்தில் நானே முன்வந்து சுங்கத் துறை அதிகரிகளிடம் கைக்கடிகாரம் கொண்டு வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் நான் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல் வெளியாகியிருக்கிறது.

நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர். நான் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள், அதற்கான சுங்க வரி மதிப்பீட்டைச் செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பிட்டு தொகையைச் சொன்னவுடன் நான் வரியைச் செலுத்தப் போகிறேன். நான் சட்டத்தை மீறிவிட்டதாக பரவும் தகவல்கள் பொய். அதேபோல், நான் கொண்டுவந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தவறானது” என்று தெரிவித்துள்ளார்.

பதிவு: November 16, 2021
டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா!- இங்கிலாந்து வீரர் நம்பர் ஒன்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ரன்களை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் அடித்துள்ளார்.

கடந்த மாதம் 17ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.


கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் டேவிட் வார்னர் பட்டியலில் 289 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் இந்த பட்டியலில் 281 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் , இலங்கை அணியின் அசலங்கா, நமீபியா அணியின் டேவிட் விசா ஆகியோர் இந்த பட்டியலில் முறையே 4, 5, மற்றும் 6 வது இடத்தில் உள்ளனர்.

இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ரன்களை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் அடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் அவர் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: November 15, 2021
டெஸ்ட் கேப்டன் ரஹானே; டி20 கேப்டன் ரோகித்!- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவு பெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது. டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். மேலும், கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் விராட் கோலி விளையாடாததால் ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 2-வது டெஸ்டில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, ஷமி ஆகியோர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25 அன்றும் 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3 அன்றும் தொடங்குகின்றன.

இந்திய அணி விவரம்: ரஹானே(கேப்டன்), புஜாரா (துணை கேப்டன்), கே.எல். ராகுல் , ரவிச்சந்திரன் அஷ்வின், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், வி.சாஹா (விக்கெட் கீப்பர்) , கே.எஸ்.பரத், ஆர்.ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா..மேலும், விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் இணைந்து, அணிக்கு தலைமை ஏற்று செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: November 12, 2021
பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை!- பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கி உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5ம் தேதி நிறைவடைந்தது. இதில் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

ரியோவில் நடந்த 2016 பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2017 ஜனவரி 25 ஆம் தேதி, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது. இந்திய அரசு இவருக்கு ஆகஸ்டு, 2020-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில், பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் காகித ஆலையின் வர்த்தக பிரிவில் துணைமேலாளராக தமிழக அரசு பணி வழங்கி உள்ளது. அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாரியப்பன் தங்கவேல் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: November 03, 2021
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... தென் ஆப்பிரிக்கா மோசமான பேட்டிங்... எளிதான இலக்கில் ஆஸ்திரேலியா!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 119 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் அபுதாபி மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டி காக்- டிர் டுசென் களமிறங்கினர். இந்த ஜோடி சிறிது நேரம் கூட நீடிக்கக்கவில்லை. 2 ரன்னில் டுசென் ஆட்டம் இழக்க மார்க்ரம் களம் கண்டார். இவர் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்குபிடித்து விளையாடினார்.

மறுமுனையில் விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் டி காக் 7 ரன்னில் வீழ்ந்தார். பின்னர், மார்க்ரம்முடன் ஜோடி சேர்ந்த க்ளாசென் 13 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து டேவிட் மில்லர் ஓரளவு தாக்குபிடித்து 16 ரன்கள் அடித்தார். பின்னர் வந்த ப்ரிடோரிஸ் ஒரு ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த மகராஜ் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினார். மறுமுனையில் நன்றாக விளையாடி வந்த மார்க்ரம் 40 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து, நோர்க்யா- ரபாடா ஜோடி சேர்ந்தனர். இவர்கள் 18வது ஓவரில் அணியின் ஸ்கோரை 101ஆக உயர்த்தினர். 19.1 ஓவரில் ரபாடா அபார சிக்சர் விளாசினார். 4வது பந்தில் நோர்க்யா 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்த 118 ரன்கள் எடுத்துள்ளது. 19 ரன்னில் கடைசி வரை ரபாடா ஆட்டம் இழக்கவில்லை. முதல் ஆட்டத்திலேயே தென் ஆப்பிரிக்கா அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 1 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல் 1 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும், ஆடம் 2 விக்கெட்டும் எடுத்தனர். 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.

பதிவு: October 23, 2021
பிரிட்டிஷ், வெர்ஜின் தீவுகளில் பல கோடி ரூபாய் முதலீடு!- வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கினாரா சச்சின்?

வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணங்கள் வெளியாகி உள்ளன. ஐசிஐஜே எனப்படும் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த பட்டியல் வெளியாகி உள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த சுமார் 1.2 கோடி ஆவணங்களை 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பல்துறை பிரபலங்களின் சட்ட விரோத கறுப்புப் பண முதலீட்டு ரகசியங்களை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடித்து இருப்பதாக ஐசிஐஜே கூறியுள்ளது. பாண்டோரா பேப்பர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான சில மாதங்களில் வெர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனந்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக் கொண்டதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

சச்சின் தவிர பாண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் தொழில் அதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட 300 இந்திய பிரபலங்களின் பெயர்கள் உள்ளதாக தெரிகிறது. அதேபோல் நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது சகோதரி தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியதும் தெரியவந்தது. ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாப் பிரபலம் ஷகீரா உள்ளிட்டோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

பதிவு: October 04, 2021
ஆஸ்திரேலியாவில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதல் சதம்!- இந்திய வரலாற்றில் அசத்தல் சாதனை

ஆஸ்திரேலியாவில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. 216 பந்துகளில், 127 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் மந்தனா.


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா, இப்போது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராரா ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய பெண்கள் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனாவும் ஷபாலி வர்மாவும் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 93 ரன்னாக இருந்தபோது ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். 44.1 ஓவர்களில் இந்திய பெண்கள் அணி, 132 ரன்னில் இருந்த போது, மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது.ஸ்மிருதி மந்தனா 80 ரன்களுடனும், பூனம் ரவுத் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த ஸ்மிருதி மந்தனா, 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 216 பந்துகளில், 127 ரன்கள் குவித்து அஸ்லீக் கார்ட்னர் பந்துவீச்சில் தஹிலா மெக்ராத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் வெளிநாடுகளில் சதமடித்த 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும், ஆஸ்திரேலியாவில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற பெருமைகளையும் அவர் பெற்றுள்ளார்.

தேநீர் இடைவேளை வரை இந்திய பெண்கள் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. தீப்தி சர்மா 12 ரன்களுடனும் தனியா பாடியா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

பதிவு: October 01, 2021
`நான் உணர்ச்சிவசப்படுகிறேன்!'- தொழிலதிபரை மணந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நெகிழ்ச்சி

தனது காதலரான தொழிலதிபர் டோனி ஐருக்கை  திருமணம் செய்துகொண்டார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப்.

ருமேனியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப். 29 வயதான ஹாலெப் 2017-19ம் ஆண்டு கால கட்டத்தில் 64 வாரங்களில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்துள்ளார். தற்போது தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் ஹாலெப், 2018ம் ஆண்டு பிரஞ்ச் ஓபன், 2019ம் ஆண்டு விம்பிள்டன் என 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

அண்மையில் நடந்த யுஎஸ் ஓபன் தொடரில் 4வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்நிலையில் தனது காதலரான தொழிலதிபர் டோனி ஐருக்கை திருமணம் செய்துகொண்டார். தனது சொந்த ஊரான கான்ஸ்டன்டாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு ஹாலெப் கூறுகையில், ``நான் உணர்ச்சிவசப்படுகிறேன். இவை கிராண்ட்ஸ்லாம் வென்றதைவிட வித்தியாசமான உணர்ச்சி, இது எனது தனிப்பட்ட பகுதி, இது மிகவும் முக்கியமான படியாகும். அது நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார். திருமண படங்களை ஹாலெப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பதிவு: September 17, 2021
`இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை விவாகரத்து செய்துவிட்டேன்!'- மனைவி அதிர்ச்சி பதிவு

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா, அவரை விவாகரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். அதிரடி ஆட்டக்காரரான இவர், இப்போது டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்காகத் தயாராகி வருகிறார். 35 வயதான இவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜி. கடந்த 8 வருடங்களுக்கு முன் இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ஆயிஷா (46), ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்தார். கிக்பாக்ஸிங் வீராங்கனை.


ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட இவர், பின்னர் விவாகரத்து செய்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து ஷிகர் தவானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், ஷிகர் தவானை பிரிந்துவிட்டதாக ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்யும் வரை, அந்த வார்த்தையை அசுத்தமானதாகவே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றும் விவாகரத்து பற்றி நீண்ட அறிக்கை ஒன்றையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஷிகர் தவான் ஏதும் தெரிவிக்கவில்லை.

பதிவு: September 08, 2021
பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் தெறிக்கவிட்ட இந்திய வீரர்கள்!- தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் மணிஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் அதானா வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினர்.

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று காலை பேட்மிண்டன் விளையாட்டில் இரண்டு பதக்கம் உறுதியானது. இந்நிலையில் பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மணிஷ் நார்வால் மற்றும் சிங்ராஜ் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

முன்னதாக கலப்பு பிரிவு பாராலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் இந்தியாவின் சிங்ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில், 218.2 புள்ளிகளுடன் மணிஷ் நார்வால் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்தனர்.

ஏற்கெனவே, ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் 216.8 புள்ளிகள் பெற்று சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்தியாவின் அவானி லெகாராவைத் தொடர்ந்து, ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று சிங்ராஜ் அசத்தியுள்ளார். தங்கம் வென்ற மணிஷ் நார்வாலுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்ராஜிக்கு ரூ.4 கோடியும் பரிசாக அறிவித்துள்ள ஹரியானா அரசு.

டோக்யோ பாராலிம்பிக் தொடரில், வரலாறு காணாத வகையில் இந்தியா பதக்க மழையை பொழிந்து வருகிறது. இதன்படி 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்று 34வது இடத்தை பிடித்துள்ளது.

பதிவு: September 04, 2021
தொடர்ந்து 2வது முறை சாதித்தார்!- பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மாரியப்பன்

டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாரியப்பன் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


ஜப்பான் தலைநகர் டோக்யோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம், 5 வௌ்ளி உள்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இன்று நடைபெற்ற டி-42 பிரிவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வென்றார். பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாரியப்பன் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க வீரர் கிரீவ் சாமுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் வெள்ளிப் பதக்கம் மாரியப்பன் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீரர் ஷரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.

தனது போராட்ட குணத்தின் மூலம் பாராலிங்பிக்கில் வெள்ளி வென்றுள்ளார் மாரியப்பன் என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார். டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார். அடுத்த பாராலிமபிக்கில் மாரியப்பன் பங்கேற்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறினார்.

"மாரியப்பன் தங்கவேலு நிலைத்தன்மை மற்றும் சிறப்பிற்கு ஒத்ததாகும். வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது" என பிரதமர் மோடி தனது ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் ஷரத்குமார் அடங்காதவர் புன்னகையை கொண்டு வந்தார். அவரது வாழ்க்கை பயணம் பலரை ஊக்குவிக்கும். அவருக்கு வாழ்த்துக்கள் என மோடி புகழாரம் செய்துள்ளார்.

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதேபோல் இந்திய வீரர் வருண் சிங் வெங்கல பதக்கம் வென்று அசத்தினார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: August 31, 2021
`துப்பாக்கி சூடுதலில் தங்கம்; ஈட்டி எறிதலில் இரட்டை பதக்கம்!'- பாராலிம்பிக்கில் அசத்தும் இந்தியர்கள்

டோக்யோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை அவானி லெகாரா தங்க பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திரா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் இரட்டை பதக்கமும் வென்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால், அவர் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இறுதிப் போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை அவனி லெகாரா சமன் செய்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 19 வயதான அவானி லெகாரா தங்கம் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திரா 64.35 மீ, சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீ தொலைவுக்கு ஈட்டி எறிந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை தட்டி சென்றுள்ளனர். இன்று ஒரே நாளில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதனால், இந்தியா இதுவரை, ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கத்தூனியா வெள்ளி வென்றார். இறுதிப் போட்டியில் 44.38மீ தூரம் வட்டு எறிந்து 2-வது இடத்தை யோகேஷ் வென்றார். டெல்லியை சேர்ந்த 24 வயதுடைய யோகேஷ் பெற்றுள்ள வெள்ளியால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இந்தியா இதுவரை, ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் அவனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். துப்பாக்கிச்சுடுதலில் உங்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் திறமை காரணமாக வெற்றி கிடைத்துள்ளது என குறிப்பிட்டார். இந்திய விளையாட்டுத் துறையில் இது ஒரு சிறப்பான தருணம் என பிரதமர் மோடி அவனிக்கு புகழராம் செய்தார்.

பதிவு: August 30, 2021
`பீஸ்ட்’ படப்பிடிப்பில் தளபதி- தல திடீர் சந்திப்பு!- வைரஸ் புகைப்படம்

சென்னையில் நடந்துவரும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள இருவரது ரசிகர்கள் ‘தளபதி - தல’ சந்திப்பு எனக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர்.

இந்த நிலையில், தற்போது சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. மீண்டும் தற்போது கோகுலம் ஸ்டூடியோவில் நடந்துவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் நடிகர் விஜய்.

அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸுடன் செல்ல சென்னை வந்துள்ள தோனி, ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடைபெறும் கோகுலம் ஸ்டூடியோவில் விளம்பர படப்பிடிப்புக்காக கலந்துகொண்டுள்ளார். இந்த சமயத்தில், விஜய்யை தோனி உற்சாகமுடன் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றன.

பதிவு: August 12, 2021
`சமீஹா பர்வீன் புறக்கணிப்பு ஏன்?; நாளை பதில் வேண்டும்!'- மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் புறக்கணிக்கப்பட்டாரா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இவ்விவகாரம் தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாளைக்குள் பதில் தராவிடில் நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம். கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சமீஹா பர்வீன் (18). இவர் ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இறந்துவிட்டார். இதற்காக சொந்த வீட்டை கூட விற்று சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது குடும்பத்தினர் கடையாலுமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்ட சமீஹா பர்வீன், பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்று வந்தார். கடந்த 2017, 2018, 2019ல் நடைபெற்ற தேசிய தடகள போட்டிகளில் 9 தங்கம் உட்பட 12 பதக்கங்களை வென்றுள்ளார். இதனையடுத்து, போலந்து நாட்டில் இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வதேச செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான டெப் அத்லெடிக்ஸ் தடகளப் போட்டிகளில் பங்கேற்க சமீஹா பர்வீன் தேர்வாகி உள்ளார் என தமிழ்நாடு அசோசியேஷன் இருந்து கடந்த ஜூலை 16ம் தேதி அவருக்கு கடிதம் வந்துள்ளது. அதில் டெல்லியில் ஜூலை 22ல் நடைபெறும் தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பர்வீன் டெல்லிக்கு சென்று தகுதி தேர்வில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெற்று தகுதி பெற்றார். ஆனால் டெல்லியிலிருந்து போட்டிக்குத் தேர்வான மற்றொரு மாணவி ஒருவர் தகுதி இழந்ததால், சமீஹா பர்வீனை போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தனர். இந்தியாவிலிருந்து இவர் மட்டுமே பெண்கள் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். ஒரு பெண்ணை மட்டும் அழைத்துச் செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு கவுன்சில் அதிகாரிகள் போன் மூலம் தெரிவித்தனர். இதனால் சமீஹா பர்வீனும், அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாகப் பல வேதனைகளை அனுபவித்த நிலையில் போட்டியில் கலந்துகொள்ள முடியாத சூழலால் கடும் வேதனையில் இருக்கிறோம் என்றும் உலக சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில், சொல்ல முடியாத அளவிற்கு சமீஹா பர்வீன் சிரமங்களை எதிர்கொண்டார் எனவும் சமீஹா பர்வீனின் தாய் சலாமத் கூறினார்.

இதனையடுத்து இந்திய விளையாட்டுக் கழகத்தின் இம்முடிவை எதிர்த்து சமீஹா பர்வீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தகுதிப்போட்டியில் தகுதி பெற்றும், பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவிடாமல் தடுப்பதா? என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இவ்விவகாரம் தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாளைக்குள் பதில் தராவிடில் நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

பதிவு: August 12, 2021
`60 பேரில் 4வது இடத்தை பிடித்தார்!'- கோல்ஃப் வீராங்கனை அதிதிக்கு ஜனாதிபதி, பிரதமர், சச்சின் வாழ்த்து

டோக்யோ ஒலிம்பிக் மகளிர் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அஷோக் அதிர்ச்சி தோல்வியடைந்தாலும் ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் டோக்யோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. இதில் தற்போது நடைபெற்று வரும் மகளிருக்கான கோல்ப் தனிநபர் போட்டியில் மொத்தம் 4 சுற்றுகள் நடைபெறும். இதில் 3-வது சுற்று நிறைவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார்.

இன்று காலை அதிதி அசோக் பங்கேற்ற 4-வது சுற்று போட்டி தொடங்கியது. அப்போது மழை குறுக்கீட்டால் போட்டி பாதிக்கப்பட்டது. மோசமான வானிலையால் போட்டி நிறுத்தப்படும் முன்பாக 3-வது இடத்தில் அதிதி அசோக் இருந்தார். இந்த நிலையில் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே பிரிவு போட்டியில் அதிதி அசோக் நான்காவது இடம் பிடித்து தோல்வியடைந்தார். இப்போட்டியில் 60 பேர் பங்கேற்ற நிலையில், அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா முதலிடம் பிடித்தார். அதிதி அசோக்குக்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் கோல்ஃப்பில் இந்தியர்கள் யாரும் இதுவரை பதக்கத்தை பெறவில்லை.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில், 'நன்றாக விளையாடினீர்கள் அதிதி அசோக்! இந்தியாவின் இன்னொரு மகள் தன் முத்திரையை பதிக்கிறாள். இன்றைய வரலாற்று சாதனைகளால் இந்திய கோல்ஃபிங்கை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளீர்கள்" என்று வாழ்த்தியுள்ளார்.

பிரதர் மோடி தனது ட்விட்டர் பதிவில், நன்றாக விளையாடினீர்கள் அதிதி. உங்களது அபார திறமையையும் முயற்சியையும் காட்டியுள்ளீர்கள். பதக்கத்தை தவறி விட்டாலும் இந்தியாவை ஒளிரச் செய்துவிட்டீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது ட்விட்டர் பதிவில், ''அற்புதமான முயற்சி அதிதி. பதக்கத்தை தவறவிட்டாலும் சாதித்துவிட்டீர்கள்" என்று பாராட்டியுள்ளார்.

பதிவு: January 01, 1970
`பதக்கத்தை இழந்தாலும் உங்கள் ஆட்டம் ஊக்குவிக்கிறது!'- மகளிர் ஹாக்கி வீரர்களுக்கு குவியும் பாராட்டு

"இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர்" என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், "இந்திய மகளிர் ஹாக்கி அணி களத்தில் சிறந்து விளங்கியது. இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர். உங்களை நினைத்து நாங்கள் பெறுமை கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டோம். ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் வீராங்கனைகள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர். பதக்கத்தை இழந்தாலும் மகளிர் அணியின் திறமையான ஆட்டம், பலரையும் ஊக்குவிக்கும். இந்திய அணியின் சிறப்பான செயல்திறனை எப்போதும் நினைவில் கொள்வோம்" என தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "இந்திய மகளிர் ஹாக்கி அணியின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்கு சற்றும் குறைவில்லாதது. முதன்முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதிவரை இந்தியாவை கொண்டுசென்றதற்காகவும் இறுதிவரை போராடியதற்காகவும் பாராட்டுகள்” என கூறியுள்ளார்.

பதிவு: January 01, 1970
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்!- 41 ஆண்டுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி அசத்தல்; குவியும் வாழ்த்து

41 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய ஹாக்கி அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டோக்யோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியிடம் 2-5 என்கிற கோல் கணக்கில் தோல்வியுற்றது. கடந்த 41 ஆண்டுகளாக பதக்கம் வெல்லாமல் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதே போல அரையிறுதிக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய ஜெர்மனி அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து ஜெர்மனியை எதிர்த்து இந்தியா கடுமையாக போராடி 5-4 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இந்திய இந்த வெற்றிக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்திய ஆடவர் ஆக்கி அணி பெற்ற வெற்றி ஹாக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய அணியின் வெற்றி உந்து சக்தியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "வரலாற்று! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த நாட்டின் குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர். எங்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது" என கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "41 வருட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஆண்கள் ஹாக்கியில் 12 வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். நான் உறுதியாக நம்புகிறேன், டோக்யோ 2020ல் இந்த வெற்றியுடன், இந்திய ஹாக்கி அணி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது" என கூறியுள்ளார்.

பதிவு: August 05, 2021
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம்!- பதக்கம் வென்று சாதித்தார் லவ்லினா

டோக்யோ ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டை அரையிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தோல்வி தழுவினாலும் இந்தியாவுக்காக இன்னொரு பதக்கமாக வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.

அரையிறுதியில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி 5-0 என்று வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். ஆனால் போராடி தோல்வி கண்ட லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார். காலிறுதியில் அபார வெற்றி பெற்ற பிறகே வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா. இருந்தாலும் இவரது திறமைக்கு தங்கம் அல்லது வெள்ளி வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் உலக சாம்பியன் வீராங்கனையிடம் அரையிறுதியில் போராடி தோல்வி தழுவினார் லவ்லினா. இதன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய ஒலிம்பிக் வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்றார்.

இதன் மூலம் இந்தியா டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் 2 வெண்கலம், ஒரு வெள்ளியுடன் 3 பதக்கங்கள் பெற்றுள்ளது. மீராபாய் சானு பளுத்தூக்குதல் வெள்ளி, பி.வி.சிந்து பாட்மிண்டன் வெண்கலம் ஆகியவற்றை அடுத்து லவ்லினா என்ற 3வது பெண் இந்தியாவுக்கு இன்னொரு வெண்கலம் வென்று தந்துள்ளார். வெல்ட்டர் வெய்ட் 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் லவ்லினா போர்கோஹெய்ன்.

அரையிறுதி முதல் சுற்றில் துருக்கி வீராங்கனை புசெனாஸ் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்தும் 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருக்கமாக வந்தார். இரண்டாவது சுற்றிலும் அதே போல் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்து 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருங்கி வந்து தோற்றார். அடுத்த சுற்றில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி மீண்டும் 10 புள்ளிகளை அனைத்து ஜட்ஜ்களிடமிருந்து பெற லவ்லினா 9,9,9, 8,8 என்று பெற்று பின் தங்கினார். இதனையடுத்து 0-5 என்று தோல்வி தழுவினாலும் வெண்கலம் வென்றார் லவ்லினா.

லவ்லினா போர்கோஹெய்ன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த போட்டியை காண்பதற்காக அம்மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, லவ்லினாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினாவிற்கு வாழ்த்துகள். குத்துச்சண்டையில் லவ்லினா பெற்ற வெற்றி இந்தியர்களை மேலும் ஊக்கப்படுத்தும். போட்டியில் லவ்லினாவின் உறுதித்தன்மை போற்றத்தக்கது" என கூறியுள்ளார்.

பதிவு: January 01, 1970
ஒலிம்பிக்!- ஈட்டி எறிதல், மல்யுத்தத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்

டோக்யோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கும், மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் புனியா காலிறுதிக்கும், ரவிக்குமார் அரையிறுதிக்கும் முன்னேறி உள்ளனர்.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வருகின்றன. அதில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர் நீரஜ் சோப்ரா. இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். இதன்மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டியில் அவர் கலந்து கொள்வார்.

இன்று காலை நடைபெற்ற மல்யுத்தப்போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்திய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கி எடை பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் கொலம்பிய வீரரை 13-2 கணக்கில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 8 நாட்டின் வீரர்கள் பங்கேற்ற காலிறுதிக்கான தகுதி சுற்று போட்டியில் கொலம்பியாவின் அர்பனோவை ரவிக்குமார் எதிர்கொண்டார். அதே போல செர்பியாவின் மிகிக்கை எதிர்கொண்ட ஜப்பானின் டகஹஹி காலிறுதிக்கு முன்றேயுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காலிறுதி போட்டியில், பல்கேரியாவின் வான்கலோவை எதிர்கொண்ட ரவிக்குமார் 14-4 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பதிவு: August 04, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்