டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண் போகாது – கெஜ்ரிவால்

0
29
tamil news, india news, india news paper, national news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
Farmers Delhi protest

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தால் தங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா – 2021 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தால் தங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மக்கள் பிரதநிதிகளுக்கு அதிகாரம் தராமல் ஆளுநருக்கு தந்துள்ளதாகவும் வேதனையுடன் கூறினார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண் போகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.