ஸ்டாலின், ரஜினி, கமல் ஓட்டு போட்டனர்!- தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு #TNAssemblyElection2021

0
30
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
rajini

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட பல தலைவர்கள் தங்களை வாக்குகளை பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
stalin

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
kamal

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோர் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி, அக்சராவுடன் வந்து சென்னை உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
ops

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார். பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தார். அவருடன் அவரது மகன் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தும் தனது வாக்கை பதிவு செய்தார். தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுகுனாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
ajith

சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் வந்துவாக்களித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார்.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
sivakarthikeyan

சென்னை தி.நகரில் உள்ள வாக்குசாவடியில் தந்தை சிவக்குமாருடன் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வந்து வாக்களித்தனர். வளசரவாக்கம் தனியார் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். சிவகங்கை கண்டனூர் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாக்களித்தார்.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
vijay

சென்னை அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வாக்களித்தார். திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வாக்களித்தார். கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி புதுப்பாளையம் அரசுப்பள்ளியில் வாக்களித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார். திருச்சி, தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வாக்களித்தார்.