பாகிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு திடீர் தடை

0
14
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
england Prime Minister Boris Johnson

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகளை பயணத் தடை பட்டியலில் இங்கிலாந்து அரசாங்கம் சேர்த்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் நோயினால் இதுவரை 43 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஆப்பிரக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என 30 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைய இங்கிலாந்து அரசு ஏற்கனவே தடைவிதித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், வங்கதேசம், பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும் பயணத் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தடை ஏப்ரல் 9ந் தேதி காலை 4 மணியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடை நடைமுறைக்கு வந்த பிறகு, குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் இங்கிலாந்து மக்கள் 10 தினங்களுக்கு கட்டாயமாக ஓட்டல்களில் தங்கி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.